உங்களின் பயணத்தின் போது அடிக்கடி ரயில் தாமதத்தால் நீங்கள் சிரமப்படுவீர்கள். அதேபோல், இனி வரும் காலங்களில் ரயில் தாமதமானால், உங்களுக்கு பிரச்னை இருக்காது. இந்த பயணத்தின் போது ரயில் தாமதமானால் ஐஆர்சிடிசியில் இருந்து சில வசதிகளைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. இதைப் பற்றிய பயனுள்ள தகவல்களை இன்று நாங்கள் உங்களுக்கு வந்துள்ளோம். அத்தகைய உரிமையைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ரயில் தாமதமானால் ஐஆர்சிடிசி இலவச உணவு வழங்கும்
ஆம், இனி உங்களின் ரயில் தாமதமானால் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) சில சேவைகளை இலவசமாக வழங்கும். அதன்படி உங்கள் ரயில் தாமதமாக வந்தால் ஐஆர்சிடிசி உங்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கும். இந்த உணவு உங்களுக்கு ஐஆர்சிடிசி ஆல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், இலவச உணவு மற்றும் குளிர்பானங்களைப் பெற நீங்கள் தயங்க வேண்டியதில்லை. எனவே ஐஆர்சிடிசி உங்களுக்கு வழங்கிய உரிமையைப் பெறுங்கள்.
மேலும் படிக்க | கொரோனாவின் அக்டோபஸ் கரங்களில் சீனா! லாக்டவுன் மற்றும் பொதுஜன சோதனைகள் மும்முரம்
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, ரயில் தாமதமாக வரும்போது, ஐஆர்சிடிசியின் கேட்டரிங் கொள்கையின்படி பயணிகளுக்குக் காலை உணவும் லேசான உணவும் வழங்கப்பட வேண்டும்.
இந்த வசதி எப்போதில் இருந்து வழங்கப்படும்?
இந்த நிலையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) விதிகளின்படி, ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இலவச வசதிகள் வழங்கப்படும். மேலும் பயணிகளுக்கு ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தால் உணவு வசதி கிடைக்காது. கேட்டரிங் கொள்கையின் கீழ், ரயில் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படும்.
இந்த வசதிகளை ஐஆர்சிடிசி வழங்குகிறது
ஐஆர்சிடிசி கொள்கையின்படி, காலை உணவில் டீ அல்லது காபி மற்றும் 2 பிஸ்கட்கள் வழங்கப்படுகின்றன. மாலை உணவில் தேநீர் அல்லது காபி மற்றும் 4 துண்டுகள் பிரட் மற்றும் பட்டர் வழங்கப்படும். ஐஆர்சிடிசி ஆனது பயணிகளுக்கு சாதம், ஊறுகாய் குழம்பு மற்றும் ஊறுகாய் பாக்கெட்டுகளை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு வழங்குகிறது. அல்லது 7 பூரிகள், மிக்ஸ் வெஜ் / உருளைக்கிழங்கு பாஜி, ஊறுகாய் பாக்கெட் மற்றும் உப்பு மற்றும் மிளகு தலா 1 பாக்கெட் போன்றவையும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | Planet Transits 2022: அடுத்த 120 நாட்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ