100 ரூபாய் முதலீட்டில் லட்சக்கணக்கில் லாபம் காண இந்த Saving Schemes உங்களுக்கு உதவும்

நாடு முழுவதும் உள்ள சிறு முதலீட்டாளர்களின் எதிர்கால தேவைகளுக்காக, பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2021, 07:41 PM IST
  • முதலீடு செய்ய ஒரு பெரிய தொகை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
  • மூத்த குடிமக்களுக்கு தபால் அலுவலகம் சிறப்பு வசதிகளை வழங்குகிறது.
  • பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த திட்டமாகும்.
100 ரூபாய் முதலீட்டில் லட்சக்கணக்கில் லாபம் காண இந்த Saving Schemes உங்களுக்கு உதவும் title=

முதலீடு செய்ய ஒரு பெரிய தொகை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் ரூ .100 முதல் தொடங்கி உங்கள் தேவைகளுக்கான ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யலாம். நாடு முழுவதும் உள்ள சிறு முதலீட்டாளர்களின் எதிர்கால தேவைகளுக்காக, பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன.

அவற்றின் மூலம் முதலீட்டை எளிதில் அடைய முடியும் மற்றும் உத்தரவாதமான வருமானத்தையும் பெற முடியும். இதுபோன்ற பெரிய முதலீட்டு விருப்பங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பெண் குழந்தைக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா

அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். இதை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் திறக்கலாம். நடப்பு நிதியாண்டில், சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் அதிகபட்சமாக ரூ .1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். இதில், நீங்கள் வெறும் ரூ .250-வில் முதலீடு செய்யத் துவங்கலாம். ரெக்கரிங் செபாசிட் (RD) மூலம் நீங்கள் 100 ரூபாயிலும் முதலீடு செய்யத் துவங்கலாம்.

தபால் நிலையத்தின் சிறிய சேமிப்பு திட்டங்கள்

திட்டம் வட்டி விகிதம்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) 7.10%

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) 7.60%

கிசான் விகாஸ் பத்ரா (KVP) 6.9%

தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) 6.8%

தபால் அலுவலக மாத வருமான திட்டம் (POMIS) 6.6%

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு 4%

தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (5 ஆண்டுகள்) 6.7%

ஐந்தாண்டு தபால் அலுவலக RD 5.8%

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 7.4%

ஒரு வருட டைம் டெபாசிட் 5.5%

ALSO READ: வீடு வாங்குபவர்களுக்கு good news: 30 bps வரை வட்டி விகிதத்தை குறைத்தது SBI!!

PPF முதலீட்டில் 1.5 லட்சம் வரிச்சலுகை

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த திட்டமாகும். இது 15 ஆண்டுகால திட்டமாகும். அங்கு உங்கள் குழந்தையின் கல்விக்காக ஒரு பெரிய சேமிப்பை உருவாக்கலாம். இதன் தற்போதைய வட்டி விகிதம் 7.10 சதவீதமாகும். முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். இது தவிர, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ், ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். மொத்தத்தில் இது மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டமாகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்களுக்கு தபால் அலுவலகம் சிறப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், வட்டி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும். 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இதில், நீங்கள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீட்டிற்கு வரி விலக்கு உள்ளது.

ALSO READ: PF subscriber-களுக்கான New Year Bonanza தொடர்கிறது: மத்திய அரசின் மிகப் பெரிய முடிவு!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News