EPS ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் ஏற்றம் விரைவில்.. அரசு சொன்ன நல்ல செய்தி

Higher Pension: இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2024, 09:14 AM IST
  • 7,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை.
  • 36 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவாகவே ஓய்வூதியம் கிடைக்கின்றது.
  • ரூ.1450 -க்கு பதிலாக கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை.
EPS ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் ஏற்றம் விரைவில்.. அரசு சொன்ன நல்ல செய்தி title=

Higher Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அவர்களது நீண்ட நாள் கோரிக்கை ஒன்று மிக விரைவில் நிறைவேற்றப்படலாம். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையக்கூடும். இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து உயர் ஓய்வூதியக் கோரிக்கையை பரிசீலிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஓய்வூதியதாரர்களின் அமைப்பான இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (என்ஏசி) தெரிவித்துள்ளது. இபிஎஸ்-95 திட்டத்தில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என சுமார் 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள் கோரி வருகின்றனர்.

EPS 95 NAC: ரூ.1450 -க்கு பதிலாக கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை

ஓய்வூதியதாரர்கள் அமைப்பு இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களது பிரதிநிதிகளை சந்தித்ததாகவும், அப்போது, ​​அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உறுதியளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் தேசிய தலைநகரில் EPS-95 NAC உறுப்பினர்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதன் பிறகு இந்த சந்திப்பு நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1,450 ரூபாய்க்கு பதிலாக அதிக ஓய்வூதியம் சராசரி மாத ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க | பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோ

36 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவாகவே ஓய்வூதியம் கிடைக்கின்றது

இந்த கமிட்டியின் தலைவர் அசோக் ரவுத், 'எங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதாக தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார். எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பிரதமர் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். வழக்கமான ஓய்வூதிய நிதிக்கு நீண்ட கால பங்களிப்புகளை செய்தாலும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மிகக் குறைவான ஓய்வூதியமே கிடைக்கிறது' என்று கூறினார். சுமார் 36 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் 1,000 ரூபாய்க்கும் குறைவான ஓய்வூதியம் பெறுவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

7,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை

குறைவான ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இந்த போராட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டன.

- தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் அவர்களுக்கு போதவில்லை என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டது.

- தற்போதைய ஓய்வூதியத் தொகையால், வயதான தம்பதியர் வாழ்வதே சிரமமாக உள்ளது. 

- இபிஎஸ்-95 என்ஏசி குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

- அதில் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு இலவச சுகாதார வசதிகளும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது.

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்களும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்து முன்பை விட அதிக ஓய்வூதியக் கோரிக்கையை நிறைவேற்ற தங்கள் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததாக ராவத் மேலும் கூறினார். இவை அனைத்தும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க |  NPS விதிகளில் மாற்றம்: மாத ஓய்வூதியம், ஓய்வூதிய நிதியில் 40% ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News