உங்களுக்கு தெரியுமா? இந்த நிறுவனங்களும் முகேஷ் அம்பானியுடையது தான்!

முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் ஒருவராக இருந்தாலும் அவரது மகள் இஷா அம்பானி பல சிறிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் நல்ல லாபம் பெறுகிறார்.

Written by - RK Spark | Last Updated : Dec 7, 2024, 06:37 PM IST
  • இஷா அம்பானி நடத்தும் நிறுவனங்கள்.
  • பேஷன் பிராண்டுகளை நடத்தி வருகிறார்.
  • அதிக லாபமும் ஈட்டி வருகிறார்.
உங்களுக்கு தெரியுமா? இந்த நிறுவனங்களும் முகேஷ் அம்பானியுடையது தான்! title=

உலகின் பணக்காரர்களில் ஒருவராக மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முகேஷ் அம்பானி இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 9.10 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரும் அவரது மனைவி நீதா அம்பானியும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் பல வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல், நெட்ஒர்க் 18, ஜஸ்ட் டைல், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ், ஐபிஎல் அணி, டெலிகாம், ஈ காமர்ஸ், ரியல் எஸ்டேட் என பல நிறுவனங்களை நடத்தியும், முதலீடு செய்தும் வருகின்றனர். முகேஷ் மற்றும் நீதா அம்பானி தம்பதிகளுக்கு அனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் படிக்க | உங்கள் பெயரில் பான் கார்ட் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா?

இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலை ஜோடிக்கு கடந்த டிசம்பர் 2018ம் ஆண்டு ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றது. அதன்படி ரிலையன்ஸ் ரீடெய்லின் நிர்வாக இயக்குநராக இஷா அம்பானி பொறுப்பேற்று சில்லறை மற்றும் பல பெரிய தொழில்களில் தனக்கென ஒரு பெயரை பெற்றுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பல முக்கிய முடிவுகளை அவர் எடுத்து வந்தாலும், இதனை தாண்டியும் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியாவில் புகழ் பெற்ற பல பிராண்டுகளின் சொந்தக்காரராக இஷா அம்பானி உள்ளார். அவரது தலைமையில் இயங்கும் 5 பிரபலமான பிராண்டுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Tira Beauty: இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இஷா அம்பானி தொடங்கினார். இது பெண்களுக்கான பிரத்யேக அழகு சாதன விற்பனை தளம் ஆகும். இங்கு உள்ளூர் முதல் சர்வதேச அளவில் உள்ளது வரை பல அழகு சாதன பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Versace, Moschino, Dolce & Gabbana மற்றும் Jimmy Choo போன்ற உயர்தர பிராண்டுகளையும் விற்பனை செய்கின்றனர்.

Hamleys: உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய பொம்மை விற்பனையாளராக ஹேம்லிஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் 2019ம் ஆண்டு £67.96 மில்லியன் அதாவது சுமார் ரூ. 620 கோடிக்கு வாங்கியது. இந்த நிறுவனத்தை தற்போது ஈஷா அம்பானி நடத்தி வருகிறார்.

AJIO: 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஃபேஷன் துறையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்லின் இ-காமர்ஸ் தளமாக மாறியுள்ளது AJIO. கடந்த ஆண்டு மட்டுமே $2 பில்லியன் அளவிற்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

Cover Story: லண்டனில் தலைமை அலுவலகத்தை கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் ஃபேஷன் பிராண்டாக கருதப்படுகிறது. ஈஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்லின் ஒரு பகுதியாக கவர் ஸ்டோரி உள்ளது.

Freshpik: 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மக்களின் ஷாப்பிங் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான உணவு வகைகள், சர்வதேச பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர்.

மேலும் படிக்க | NPS: ரூ.50,000 மாத ஓய்வூதியம் அளிக்கும் அட்டகாசமான அரசாங்க திட்டம்.... முழு கணக்கீடு இதொ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News