பயணிகளின் கவனத்திற்கு! ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ்அப்

139 ஹெல்ப்லைன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புவதன் மூலம் உங்கள் ரயிலுக்கு முன்னால் உள்ள நிலையம் மற்றும் பிற விவரங்களைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 29, 2022, 04:43 PM IST
  • ரயில் இயங்கும் நிலை
  • ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்
பயணிகளின் கவனத்திற்கு! ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ்அப் title=

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். இப்போது நீங்கள் வாட்ஸ்அப் மூலம் நேரலை ரயில் நிலையை சரிப்பார்க்கலாம். மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரெய்லோஃபி இந்த புதிய வசதியை ரயில் பயணிகளுக்காக கொண்டு வந்துள்ளது. இப்போது பயணிகள் ரயில் இயங்கும் நிலையைச் சரிபார்ப்பதற்கும், பிஎன்ஆர்ஐப் பார்ப்பதற்கும் வெவ்வேறு வகையான ஆப்ஸைப் பதிவிறக்க வேண்டியதில்லை. இந்த தகவல்கள் அனைத்தையும் வாட்ஸ்அப் மூலம் மட்டுமே எளிதாகப் பெற முடியும்.

வாட்ஸ்அப் சாட்டிங் பாக்ஸில் உள்ள எண்ணை டைப் செய்வதன் மூலம் ரயில் தொடர்பான அனைத்து தகவல்களையும் எளிதாகப் பெறலாம். இதுமட்டுமின்றி, 139 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் செய்வதன் மூலம் உங்கள் ரயிலுக்கு முன்னால் உள்ள நிலையம் மற்றும் பிற விவரங்களைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். வாட்ஸ்அப்பில் உங்கள் ரயிலின் நிலையைப் பார்க்க விரும்பினால், இந்தப் படிகளைப் பின்பற்றவும்-

மேலும் படிக்க | Indian Railways: 94 ஆண்டுகளுக்கு முன்பே ரயில்களில் AC வசதி; ஆச்சர்ய தகவல்..!!

இந்த வழியில் வாட்ஸ்அப்பில் உங்கள் ரயில் நிலையை சரிபார்க்கவும்

1. முதலில் ரெய்லோஃபி இன் வாட்ஸ்அப் எண்ணை +91-9881193322 உங்கள் மொபைலின் தொடர்பு பட்டியலைச் சேமிக்கவும்.
2. உங்கள் தொடர்பு பட்டியலை Refresh செய்யவும்.
3. இப்போது வாட்ஸ்அப்பில் இந்த எண்ணைப் பார்க்க முடியும்.
4. இதற்குப் பிறகு, இந்த சாட் போக்ஸில் 10 PNR இலக்க எண்ணை அனுப்பவும்.
5. இந்த சாட் போக்ஸில் உங்கள் ரயிலின் நிகழ்நேர இயங்கும் நிலையைப் பெறுவீர்கள்

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் உணவை முன்பதிவு செய்யுங்கள்
ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் இருக்கையில் உணவை ஆர்டர் செய்ய விரும்பினால், ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் இணையதளமான www.ecatering.irctc.co.in இல் உள்நுழைந்து ஆர்டர் செய்யலாம். இதற்கு உங்கள் PNR எண் மற்றும் ஸ்டேஷனை தேர்வு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ஐஆர்சிடிசி வழங்கிய உணவகங்களின் பட்டியலிலிருந்து உணவைத் தேர்ந்தெடுக்கவும். டிஜிட்டல் பேமெண்ட் அல்லது கேஷ் ஆன் டெலிவரி என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். டெலிவரி குறியீட்டுடன் சரியான நேரத்தில் உணவு வந்து சேரும். ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உணவை ஆர்டர் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இதனுடன், ஆர்டர் செய்த பிறகும் உணவு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் முழு பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News