புது டெல்லி: பிஎஸ் -4 வாகனங்கள் ஏப்ரல் 1 முதல் பதிவு செய்யப்படாது. இது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அடுத்து, பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு 10 நாள் நீட்டிப்பு காலம் இருந்தபோதிலும், இது தொடர்பாக அரசாங்கத்தால் எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பிஎஸ் -4 வாகனங்களை 2020 மார்ச் 31 வரை விற்க மத்திய அரசாங்கம் அனுமதி அளித்து. 2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் -6 தரமான வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது.
மத்திய அரசு பிறப்பித்த தனது ஆணையில், மார்ச் 27 ம் தேதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
#BREAKING
Exclusive: Government issues orders to state governments banning sale of BS IV Vehicles from tomorrow, April 1 2020. Govt also asks state governments to strictly comply with Supreme Court's March 27 ( Attached below ) order to allow selling of 10 BS IV Inventory. pic.twitter.com/xXVO4a0RQX— Chetan Bhutani (@BhutaniChetan) March 31, 2020
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி, எந்தவொரு கார் அல்லது பைக் உற்பத்தியாளர் அல்லது வியாபாரி பிஎஸ் -4 வாகனங்களை 2020 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு விற்கவோ பதிவு செய்யவோ முடியாது. அனைத்து பிஎஸ் -4 வாகனங்களும் 2020 மார்ச் 31 க்குள் பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ் -4 வாகனங்களை பதிவு செய்வது குறித்து வியாபாரிகளுக்கும் நீதிமன்றம் சிறிது நிவாரணம் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசாங்கத்தால் எந்த அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை. எனவே இப்போது வாகன உற்பத்தியாளர் அல்லது வியாபாரி பிஎஸ் -4 வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது.