பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க ஆலோசனை... புத்தாண்டில் வரப்போகும் மகிழ்ச்சி செய்தி?

தீபாவளிக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பொதுமக்களுக்கு அரசு பரிசு வழங்கியுள்ளது. நவம்பர் 4, 2021 அன்று, அரசாங்கம் பெட்ரோலை 5 ரூபாயும், டீசலை 10 ரூபாயும் குறைத்தது. அதே போல் புத்தாண்டிலும் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 29, 2023, 12:35 PM IST
  • கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு உலக அளவில் தேவை குறைந்ததே முக்கிய காரணம்.
  • தீபாவளிக்கு முன், மத்திய அரசு, பெட்ரோலை 5 ரூபாயும், டீசலை 10 ரூபாயும் குறைத்தது.
  • எதிர்காலத்திலும் கச்சா எண்ணெய் விலை குறையலாம் என நம்பப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க ஆலோசனை... புத்தாண்டில் வரப்போகும் மகிழ்ச்சி செய்தி? title=

பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுக்கு மத்திய அரசு பல வழிகளில் மகிழ்ச்சியையும் பரிசையும் கொடுத்து வருகின்றது. முன்னதாக தீபாவளிக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பொதுமக்களுக்கு அரசு பரிசு வழங்கியதை போல, இப்போதும் புத்தாண்டில் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு  முன், மத்திய அரசு, பெட்ரோலை 5 ரூபாயும், டீசலை 10 ரூபாயும் குறைத்தது. அதே போல் புத்தாண்டிலும் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புத்தாண்டில், பணவீக்கத்திலிருந்து விடுபட, சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கக் கூடும். பெட்ரோல், டீசல் விலையை அரசு லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான ஆலோசனை

எரிபொருள் விலையை குறைப்பதற்கான திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுக்கு இடையேயான கூட்டத்தில் சமீபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த இந்த கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை (Petrol & Diesel Price)  குறைப்பதற்கான பல்வேறு சூத்திரங்கள் மற்றும் விருப்பங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சுமையை அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கூட்டாகச் சுமக்கும் என்றும் கிடைத்த தகவல் கூறுகின்றன. கடந்த ஆண்டு மே 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் சமீபத்திய விலைகள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) படி, இன்று டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.89.62 ஆகவும் உள்ளது. அதே சமயம் மும்பையில் பெட்ரோல் விலை ரூ.106.31 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.27 ஆகவும் உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.106.03 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.76 ஆகவும் உள்ளது.

மேலும் படிக்க | செயற்கை தொழில்நுட்பத்தில் ChatGPT போல் பாரத் ஜிபிடியை அறிமுகப்படுத்தும் அம்பானி

எண்ணெய் நிறுவனங்கள் அமோக லாபம் ஈட்டி வருகின்றன

கச்சா எண்ணெய் விலை உயர்ந்த பிறகு, 2022ம் ஆண்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு 17 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 35 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்குப் பிறகு, நிலைமை மாறி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மீது லிட்டருக்கு 8 - 10 ரூபாய் லாபம், டீசல் லிட்டருக்கு 3 முதல் 4 ரூபாய் லாபம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

கச்சா எண்ணெய் விலை கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்து வருகிறது. பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு சுமார் $76 மற்றும் WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் $71. இந்த வாரம் கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு உலக அளவில் தேவை குறைந்ததே முக்கிய காரணம். இதுபோன்ற சூழ்நிலையில், எதிர்காலத்திலும் கச்சா எண்ணெய் விலை குறையலாம் என நம்பப்படுகிறது.

மத்திய அரசு அளித்துள்ள நிவாரணம்

பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுக்கு மத்திய அரசு பல வழிகளில் நிவாரணம் அளித்துள்ளது.  முன்னதாக ரக்ஷாபந்தன் பண்டிகைக்கு சற்று முன், சமீபத்தில் எல்பிஜி விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது இதற்கு ஒரு பெரிய உதாரணம். பெட்ரோல், டீசல் பற்றி குறிப்பிடுகையில், ​​முன்னதாக, தீபாவளிக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பொதுமக்களுக்கு அரசு பரிசு வழங்கியுள்ளது. நவம்பர் 4, 2021 அன்று, அரசாங்கம் பெட்ரோலை 5 ரூபாயும், டீசலை 10 ரூபாயும் குறைத்தது. நாட்டில் எரிபொருள் விலையில் கடைசியாக மாற்றம் 24 மே 2022 அன்று செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நாட்டின் ‘பெஸ்ட்’ வங்கிகள் இவைதான், பணம் பத்திரமா இருக்கும்: ஆர்பிஐ வெளியிட்ட லிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News