Car Loan Apply: கார் கடன் பலரது கார் வாங்கும் கனவை தற்போது எளிதாக்கியுள்ளது. கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது எந்த எந்த வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்குகிறது என்பதை தான் முதலில் பார்ப்போம். வங்கியில் இருந்து கார் கடன் பெறுவது சுலபம் என்றாலும், குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடனை பெறுவது தான் கடினம். அதே போல, கார் லோன் எடுக்கும் போது தேவைப்படும் ஆவணங்கள் குறித்து உங்களுக்குத் தெரியாவிட்டால் அது மிகவும் கடினமாகிவிடும். மற்ற வங்கிகளைக் காட்டிலும் குறைவான வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்கும் பல வங்கிகள் உள்ளன. வங்கிகள் தவிர, NBFCகளும் கார் கடன்களை வழங்குகின்றன. குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்கும் 5 வங்கிகளை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!
UCO வங்கி: இந்த வங்கி மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்குகிறது. இதன் ஆண்டு வட்டி விகிதம் 8.45 சதவீதம் முதல் 10.55 சதவீதம் ஆகும். மேலும், செயலாக்க கட்டணம் எதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக ரூ.5 லட்சம் கார் கடனுக்கான மாத இஎம்ஐ ரூ.10,246 முதல் ரூ.10,759 வரை இருக்கும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: இது குறைந்த கார் கடன் வட்டி விகிதத்தை கொண்டுள்ளது. 8.70 சதவீதம் முதல் 10.45 சதவீதம் வரை இந்த வங்கி கார் கடனை வழங்குகிறது. கடன் செயலாக்கக் கட்டணம் ரூ. 1000 ஆகும். ரூ. 5 லட்சம் கடனுக்கான மாத இஎம்ஐ ரூ. 10,307 முதல் ரூ.10,735 வரை இருக்கும்.
கனரா வங்கி: மலிவு விலையில் கார் கடன் வழங்குவதில் கனரா வங்கியும் உள்ளது. இந்த வங்கி கார் கடனை 8.70 சதவீதம் முதல் 12.70 சதவீதம் வரை வழங்குகிறது. இதில், செயலாக்க கட்டணம் 0.25 சதவீதம் அல்லது ரூ.2500 ஆகும். ரூ.5 லட்சம் கடனுக்கான மாத இஎம்ஐ ரூ.10,307 முதல் ரூ.11,300 வரை இருக்கும்.
மகாராஷ்டிரா வங்கி: இந்த வங்கி குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்குகிறது. இதன் வட்டி விகிதம் 8.70 சதவீதம் முதல் 13 சதவீதம் ஆகும். இதில் செயலாக்க கட்டணம் 0.25 சதவீதம் (ரூ 1000 முதல் 15,000 வரை) இருக்கும். ரூ.5 லட்சம் கார் கடனுக்கான மாத இஎம்ஐ ரூ.10,307 முதல் ரூ.11,377 வரை இருக்கும். இது தவிர நீங்கள் இந்த வங்கியில் வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அல்லது இந்த வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருந்தால், வட்டி விகிதத்தில் மேலும் 0.25 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி: பஞ்சாப் வங்கியும் 9 சதவீதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் கார் கடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த வங்கியின் கார் கடனுக்கான வட்டி விகிதம் 8.75 சதவீதம் முதல் 10.60 சதவீதம் வரை உள்ளது. மேலும், கார் கடன் பெறுவதற்கான செயலாக்கக் கட்டணம் 0.25 சதவீதம் (ரூ. 1000 முதல் 1500 வரை) ஆகும். ரூ.5 லட்சம் கார் கடனைப் பெறும்போது மாத இஎம்ஐ ரூ.10,319 முதல் ரூ.10,772 வரை இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ