மத்திய ஊழியர்கள் அடிச்சது அசத்தல் ஜாக்பாட்: DA உயர்வுக்கு HRAல் 12600 ரூபாய் பலன்

DA Hike: அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, லோக்சபா தேர்தல் அறிவிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு அறிவித்தது. அதன்படி அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 14, 2024, 12:02 PM IST
  • அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • அகவிலைப்படி 5 சதவீதத்தை எட்டும்போது HRA இல் மாற்றம் ஏற்படும்?
  • அகவிலைப்படி பழைய விகிதத்தின்படி கணக்கிடப்படுகிறது.
மத்திய ஊழியர்கள் அடிச்சது அசத்தல் ஜாக்பாட்: DA உயர்வுக்கு HRAல் 12600 ரூபாய் பலன் title=

DA Hike: அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, லோக்சபா தேர்தல் அறிவிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு அறிவித்தது. அதன்படி அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

HRA Calculation: லட்சக்கணக்கான ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) மத்திய அரசு 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதை மார்ச் முதல் வாரத்தில் அரசு அறிவித்திருந்தார். நாடு முழுவதும் உள்ள மத்திய ஊழியர்களுக்கு 2024 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதம் எட்டும்போது, ​​வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் சில கொடுப்பனவுகளிலும் மாற்றம் இருக்கும். அகவிலைப்படியை உயர்த்திய பிறகு, இப்போது மத்திய ஊழியர்கள் மற்ற அலவன்ஸிலும் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

எச்ஆர்ஏ மாற்றம் குறித்து எந்த உத்தரவும் வெளியிடப்படவில்லை:
கொடுப்பனவுகளின் பட்டியல் ஏற்கனவே DoPT ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு இது திருத்தம் செய்யப்படும். இருப்பினும், எச்ஆர்ஏவில் மாற்றங்கள் குறித்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. இப்போது எச்.ஆர்.ஏ மாற்றங்கள் குறித்து மத்திய அரசு தனித்தனியாக தகவல் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால் HRA எவ்வளவு அதிகரிக்கும் என்கிற பெரிய கேள்வி உள்ளது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்-

மேலும் படிக்க | கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்

அகவிலைப்படி 5 சதவீதத்தை எட்டும்போது HRA இல் மாற்றம் ஏற்படும்?
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை அடைந்தவுடன் HRA மாற்றங்கள் நிச்சயம். ஆனால் அகவிலைப்படியில் ஏற்படும் மாற்றம் நகரத்தின் வகைக்கு ஏற்ப மத்திய ஊழியர்களின் ஹெச்ஆர்ஏவை பாதிக்கும். HRA கணக்கிடுவதற்கு, சில காரணிகளின் அடிப்படையில் நகரங்கள் X, Y மற்றும் Z வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவின் படி, ஜூலை 1, 2017 ஆம் தேதி முதல், வீட்டு வாடகை கொடுப்பனவானது X, Y மற்றும் Z வகை நகரங்களுக்கான அடிப்படை சம்பளத்தில் முறையே 24%, 16% மற்றும் 8% ஆக மாற்றப்பட்டுள்ளது.

அகவிலைப்படி பழைய விகிதத்தின்படி கணக்கிடப்படுகிறது:
பின்னர், அகவிலைப்படி 25% ஐ எட்டியபோது, ​​X, Y மற்றும் Z நகரங்களில் HRA விகிதங்கள் முறையே அடிப்படை ஊதியத்தில் 27%, 18% மற்றும் 9% என மாற்றப்பட்டது. எனவே, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ. 35,000 எனில், நகர வகையின்படி HRA பின்வருமாறு இருக்கும்-

1.) X வகை நகரங்களுக்கு, ரூ. 35,000 இல் 27% அதாவது ரூ. 9,450
2.) Y வகை நகரங்களுக்கு, ரூ. 35,000 இல் 18% அதாவது ரூ. 6,300
3.) Z வகை நகரங்களுக்கு, ரூ. 35,000 இல் 9% அதாவது ரூ. 3,150.

இந்த வழியில், எக்ஸ் வகை நகரங்களுக்கு HRA ரூ.9,450 ஆகவும், Y பிரிவு நகரங்களுக்கு ரூ.6,300 ஆகவும், Z வகை நகரங்களுக்கு ரூ.3,150 ஆகவும் இருக்கும். ஆனால் இப்போது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, அகவிலைப்படி 50% ஆக எட்டும் போது, ​​HRA விகிதம் X, Y மற்றும் Z வகை நகரங்களுக்கு முறையே 30%, 20% மற்றும் 10% ஆக உயர்த்தப்பட வேண்டும்.

புதிய விகிதத்தின்படி HRA கணக்கீடு
இப்போது புதிய விகிதத்தின்படி, மத்திய ஊழியர்களுக்கு ரூ.35,000 அடிப்படை ஊதியத்தில் திருத்தப்பட்ட HRA வழங்கப்படும். புதிய விகிதத்தின்படி கணக்கீட்டைப் பார்ப்போம்-

1.) எக்ஸ் வகை நகரங்களுக்கு, ரூ. 35,000 இல் 30% அதாவது ரூ. 10,500
2.) Y வகை நகரங்களுக்கு, 20% ரூபாய் 35,000 அதாவது ரூ. 7,000
3.) Z வகை நகரங்களுக்கு, ரூ. 35,000 இல் 10% அதாவது ரூ. 3,500.

மேலும் படிக்க | சிறு சேமிப்பை அப்படியே டபுள் ஆக்குவது எப்படி? சில ஸ்மார்ட் திட்டங்கள் இதோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News