Budget 2021: Budget Mobile App மூலம் நிர்மலா சீதாராமன் வழங்கும் பட்ஜெட்டை நேரலையில் காணலாம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள கூகிள் பிளே ஸ்டோரிலிருந்தும், iOS சாதனங்களில் (ஐபோன் மற்றும் ஐபாட்) உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 08:49 AM IST
  • நிதி அமைச்சர் பட்ஜெட்டை வழங்குவதை ‘யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்’ நேரடியாகப் பார்க்கலாம்.
  • முதல்முறையாக, மத்திய பட்ஜெட் 2021 முற்றிலும் காகிதமற்ற முறையில் இருக்கும்.
  • இந்த செயலி பட்ஜெட் ஆவணங்ளுக்கான எளிதான அணுகலை அளிக்கும்.
Budget 2021: Budget Mobile App மூலம் நிர்மலா சீதாராமன் வழங்கும் பட்ஜெட்டை நேரலையில் காணலாம் title=

புதுடெல்லி: COVID-19 நெருக்கடியிலிருந்து இந்தியா மீண்டு வரும் இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று (திங்கள்கிழமை, பிப்ரவரி 01, 2021) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கல், நிதி அமைச்சரின் உரையுடன் தொடங்கும். அவரது உரை காலை சுமார் 11 மணியளவில் நடைபெற உள்ளது. நிர்மலா சீதாராமன் மூன்றாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, நிதியமைச்சரும் அவரது குழுவும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்திப்பார்கள். அனுராக் தாக்கூர் மற்றும் நிதி அமைச்சகத்தின் மற்ற அதிகாரிகளும் உடன் இருப்பார்கள்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை மற்றும் பட்ஜெட் (Budget) வழங்கலை சமீபத்தில் நிதியமைச்சர் அறிமுகப்படுத்திய ‘யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்’ நேரடியாகப் பார்க்கலாம். புதிதாக தொடங்கப்பட்ட யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி சட்டமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் பட்ஜெட் ஆவணங்களை எந்த வித தடையுமின்றி எளிதாக அணுக உதவுகிறது.

ALSO READ: Budget 2021: வரி விலக்கு முதல் கல்விக் கடன் வரை, இந்தியாவின் Top 10 எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட் செயலியை, பொருளாதார விவகாரங்கள் துறையின் (DEA) வழிகாட்டுதலின் கீழ் தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது.

2021 ஐ பிப்ரவரி 1, 2021 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் ஆவணங்கள் மொபைல் செயலியில் கிடைக்கும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை (Mobile App) ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள கூகிள் பிளே ஸ்டோரிலிருந்தும், iOS சாதனங்களில் (ஐபோன் மற்றும் ஐபாட்) உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். மத்திய பட்ஜெட் வலைத்தளத்திலிருந்தும் இதை நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த பட்ஜெட் செயலி பொது மக்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்பதை இங்கே காணலாம்:

-அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வருடாந்திர நிதிநிலை அறிக்கை (பொதுவாக பட்ஜெட் என அழைக்கப்படுகிறது), மானியங்களுக்கான தேவை (டிஜி), நிதி மசோதா உள்ளிட்ட மத்திய பட்ஜெட்டின் 14 ஆவணங்களையும் பயனர்கள் முழுமையாக அணுக இந்த செயலி உதவும்.

இந்த இடைமுகத்தில் மொழிகளை தேர்வு செய்யலாம் - ஆங்கிலம் மற்றும் இந்தி.

- இந்த யூசர் ஃப்ரெண்ட்லி இடைமுகம், ஆவணங்களை பயனர்களை பதிவிறக்கம் செய்ய, அச்சிட, ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் செய்ய (சிறிதாக்க, பெரிதாக்க) மற்றும் ஆவணத்தொகுப்பில் வேண்டியவற்றை தேட உதவும்.

-இந்த செயலி Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கும்.

-பிப்ரவரி 1 ம் தேதி நிதியமைச்சரின் பட்ஜெட் உரை முடிந்ததும் செயலியின் பயனர்களுக்கு அனைத்து பட்ஜெட் ஆவணங்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக, மத்திய பட்ஜெட் 2021 முற்றிலும் காகிதமற்ற முறையில் இருக்கும். தற்போது இருக்கும் தொற்றுநோயின் காரணமாக, பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படாது.

பட்ஜெட் ஆவணங்களை அச்சிட, தொற்று அச்சத்திற்கு மத்தியில், சுமார் 100 பேர் சுமார் பதினைந்து நாட்கள் அச்சகத்தில் தங்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவிற்கு நாடாளுன்றத்தின் (Parliament) இரு அவைகளும் மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளன.

ALSO READ: Budget 2021: இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வழங்கியவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News