புதுடெல்லி: கிரிப்டோ கரன்சி சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. திங்களன்று கிரிப்டோ சந்தை முதலீட்டாளர்களை அச்சத்தின் உச்சிக்கு அழைத்துச்சென்றது. ஒரு பிட்காயினின் விலை 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு சுமார் $25,600 ஆகக் குறைந்தது.
உலகளவில், குறிப்பாக அமெரிக்காவில், பணவீக்கத்தில் கூர்மையான அதிகரிப்பு காரணமாக, அபாயகரமான எதிர்வினைகளின் அச்சத்தில் உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி மேலும் 7 சதவீதம் சரிந்தது.
நவம்பர் 2021 இல் பிட்காயின் (BTC) அதுவரை இல்லாத அளவுக்கு $68,000 ஐ எட்டியது. அதன் பின்னர் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த விகிதத்தில் இந்த ஆண்டு பிட்காயின் $ 14,000 ஐ எட்டக்கூடும்.
மேலும் படிக்க | கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்
ட்விட்டர் த்ரெட் ஒன்றில், ஆன்-செயின் அனலிட்டிக்ஸ் பிளாட்ஃபார்ம் கிரிப்டோகுவாண்டின் பங்களிப்பாளரான வென்ச்சர்ஃபௌண்டர், 2022 ஐ பிட்காயினின் வீழ்ச்சியடையும் ஆண்டாக கணித்துள்ளார்.
"அடுத்த 670 நாட்களில், பிடிசி அடுத்த 6 மாதங்களில் முழுமையாக வீழ்ச்சியைக் காணும். சுழற்சியின் அடிப்பகுதியை ($14-21k) எட்டும். பின்னர் 2023 இன் பெரும்பகுதியில் சுமார் $28-40k எட்டப்பட்டு, அடுத்த பாதிக்குள் மீண்டும் ~$40k ஆக இருக்கும்," ஒன்று ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தியமான கீழ் வரம்பு $14,000 ஆக இருக்கும். இது இது வரையிலான உச்ச வரம்பான $68,000 -லிருந்து 80 சதவிகிதம் வீழ்ச்சியைக் குறிக்கும்.
இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சியான ஈதர் (ETH)-ம் கணிசமாக சரிந்தது.
ஈதெரியம் விலைகள் வார இறுதியில் கடும் தாக்கத்தை எதிர்கொண்டன. இரண்டாவது பெரிய டிஜிட்டல் கரன்சி அதன் 2018 வரம்புக்கு கீழ் சென்றது.
ஆன்-செயின் அனலிட்டிக்ஸ் வழங்குநரான கிளாஸ்னோட், ஈதேரியம் சந்தையானது ETH ரியலைஸ்ட் விலையான $1,781க்குக் கீழே குறைந்துள்ளதாக அறிவித்தது.
திங்கட்கிழமை, இந்த கிரிப்டோகரன்சி $1,355 ஆக சரிந்தது. இதன் விளைவாக 40 சதவீதத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
கிரிப்டோ கரன்சியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Cryptocurrency முதலீட்டாளர்களுக்கு ஷாக்: 28% ஜிஎஸ்டி விதிக்க ஏற்பாடுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR