Old Pension Scheme முக்கிய அப்டேட்: உச்ச நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என பல மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 12, 2023, 12:27 PM IST
  • ஜனவரி 11ம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு பெரிய தீர்ப்பை வழங்கியது.
  • இதில் சிஆர்பிஎஃப் ஊழியர்கள் மற்றும் ஜவான்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
  • இந்த விஷயத்தில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Old Pension Scheme முக்கிய அப்டேட்: உச்ச நீதிமன்றம் கொடுத்த ஷாக்!! title=

பழைய ஓய்வூதிய திட்டம்: ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மத்திய அரசின் சில குறிப்பிட்ட ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். பிப்ரவரி 2024 -க்குப் பிறகு, அவர்களது ஓய்வூதியத் திட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. இது பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வர வேண்டும் என பல மாதங்களாக மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பல வித பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. சில மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது இது குறித்த ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது. 

ஊழியர்கள் தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்துக்காக காத்திருக்க வேண்டும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு வந்துள்ளது. அதன்பிறகு 2024 பிப்ரவரி வரை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை ஊழியர்கள் பெற முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

லட்சக்கணக்கான மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெற்றிருக்கலாம். இதற்கு, ஜனவரி 11ம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு பெரிய தீர்ப்பை வழங்கியது. இதில் சிஆர்பிஎஃப் ஊழியர்கள் மற்றும் ஜவான்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தடை உத்தரவு பிறப்பித்தது.

அடுத்த விசாரணை பிப்ரவரி 2024 இல் நடைபெறும்

நீண்ட விசாரணைக்குப் பிறகு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு நோட்டீஸ் பிறப்பித்து, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தடை விதித்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் சர்மா உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். துணை ராணுவப் படைகளுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவது தடை செய்யப்படும் என்று அதே நீதிபதி பெஞ்ச் கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் அடுத்த விசாரணை இப்போது பிப்ரவரி 2024 இல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்களின் வாதம்

இந்த வழக்கில், மனுதாரர்கள் வாதிடுகையில், தங்களுக்கு அக்டோபர் 2004 முதல் 2005 வரை உதவி கமாண்டர் பதவிக்கு நியமனம் வழங்கப்பட்டது. 2003 ல் அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஜனவரி 2004 இல் அமல்படுத்தப்பட்டது. ஆனால், திட்டம் படைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் அப்படியே உள்ளதால், ஆயுதப்படைகளுக்குப் பொருந்தாது. அரசின் நிர்வாக கால தாமதத்தால் என்பிஎஸ் அமலாக்கத்திற்குப் பிறகு நியமனம் செய்யப்பட்டவர்கள் முன்பு பணிக்குத் தேர்வு செய்யப்பட்டதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெற வேண்டும் என வழக்கில் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்களுக்குப் பின்னர்தான் நியமனம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க |  Income Tax Return: வருமான வரி ரிட்டர்ன்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்கள்!

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

முன்னதாக இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. டெல்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், மத்திய துணை ராணுவப் படைகள் இந்திய ஒன்றியத்தின் ஆயுதப் படைகள் என்று கூறியது. அத்தகைய சூழ்நிலையில், மத்திய துணை ராணுவப் படைகளில் என்பிஎஸ்-ஐ நீக்க நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இது மட்டுமின்றி, இன்றோ, இதற்கு முன்னதாகவே அல்லது வரும் காலங்களிலோ யாராவது பணியமர்த்தப்பட்டாலும், அத்தகைய அனைத்து  ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள் என டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியிருந்தது. 

இந்த வழக்கில் ஜனவரி 11-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை 8 வாரங்களுக்குள் அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் முடிந்துவிட்டது. நீதிமன்றத்தில் மத்திய அரசு 12 வார கால அவகாசம் கேட்டது. இந்த வழக்கை பரிசீலிக்க கால அவகாசம் கோரியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.

இது தேர்தல் பிரச்சினையாக மாறலாம்

மத்திய அரசைப் பொறுத்தவரை, மத்திய துணை ராணுவப் படைகளை ஆயுதப் படைகளாகக் கருதத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. பழைய ஓய்வூதியத் திட்டப் பிரச்சினையும் இந்தச் சுழலில் சிக்கியுள்ளது. மத்திய அரசுப் பணிகளில் 2004 இல் சேர்க்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதே நேரத்தில் சிஏபிஎஃப்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து அரசு ஊழியர்களுடன் வெளியேற்றப்பட்டனர். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மட்டுமே நாட்டில் உள்ள ஆயுதப் படைகள் என்று அரசாங்கம் நம்புகிறது. அதே நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான கோரிக்கையைப் பார்க்கும்போது, CAP ஊழியர் சங்கம் இதை தேர்தலுக்கு முன் ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றும் என்று நம்பப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நம் நாட்டில் பொது தேர்தல்கள் நடக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  ஊழியர்களுக்கு நற்செய்தி! ஓய்வு பெரும் வயது 2 ஆண்டுகள் அதிகரிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News