Budget 2025: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக 18 மாத அரியர் தொகைக்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்போது அகவிலைப்படி அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. இது ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dearness Allowance: அகவிலைப்படி ஏன் முடக்கப்பட்டது?
சில ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை ஆட்கொண்ட கொரோனா நோய்த்தொற்றால் உலகமே ஸ்தம்பித்து போனது. இது அனைத்து நாடுகளையும் நாட்டு மக்களையும் கடும் தொல்லைக்கும் அச்சத்திற்கும் ஆளக்கியது. அந்த சந்தர்ப்பத்தில் உருவான அசாதாரண சூழலால் அனைத்து நாடுகளும் நிதி நெருக்கடியை சந்தித்தன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. கொரோனா தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட நிதி சிக்கல்களை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை அரசு முடக்கியது.
18 Month DA Arrears: 18 மாத டிஏ அரியர்
3 தவணைகளுக்கான அகவிலைப்படி முடக்கப்பட்டது. ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்று தவணைகளை நிறுத்த அரசு முடிவு செய்தது. அந்த தொகை, அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவு மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. நிலைமை சற்று சரியானவுடன் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியின் அரியர் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, இந்த நிலுவைத் தொகையை வழங்குமாறு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
Union Budget 2025
இப்போது 2025 பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் இந்த நிலுவையில் உள்ள DA மற்றும் DR நிலுவைகளை செலுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நிஜமானால், இந்த முடிவு கோடிக்கணக்கான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) பெரும் நிவாரணமாக அமையும்.
Central Government Employees: டிஏ நிலுவைத் தொகைக்கான கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவ அமைப்பான கூட்டு ஆலோசனை அமைப்பின் (ஜேசிஎம்) செயலாளரான ஷிவ் கோபால் மிஸ்ராவும் 18 மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகையை வழங்க அனுமதிக்குமாறு அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். தொற்றுநோயால் நிதி நிலைமையில் சிக்கல்கள் இருந்தன, ஆனால் இப்போது நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகிறது என்று அவர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், DA நிலுவைத் தொகையை வழங்குவது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என அவர் தெரிவித்துள்லார்.
பட்ஜெட் 2025
பணவீக்கத்தின் இந்த சகாப்தத்தில், டிஏ நிலுவைத் தொகையை வழங்குவது மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். 1 பிப்ரவரி 2025 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் இந்த பிரச்சினையில் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கலாம். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டாகும். இதனால் இது குறித்த ஊழியர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
அரசு எதன் அடிப்படையில் முடுவெடுக்கலாம்?
தற்போது இந்த பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதற்கு அரசு ஒப்புதல் அளித்தால், அது ஊழியர்களுக்கு பொருளாதார நிவாரணம் கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், அவர்களுக்கான அரசின் நேர்மறையான முயற்சியின் அடையாளமாகவும் இது இருக்கும். வரும் பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது தொற்றுநோய்க்குப் பிறகு வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் ஊழியர்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும். பட்ஜெட் 2025 -இல் டிஏ அரியர் (DA Arrears) குறித்த நல்ல செய்தி வரும் என லட்சக்கணக்கான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)
மேலும் படிக்க | EMI-ல் டூவீலர் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களை நியாபகம் வச்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ