Best SIP: பம்பர் வருமானம் பெற இந்த 3 எஸ்ஐபி-களில் முதலீடு செய்யுங்கள்

Best SIP For Investment: பாதுகாப்பான, லாபகரமான முதலீடுகளை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? எஸ்ஐபி உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்.  சிறந்த செயல்திறன் கொண்ட சில எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான பரிந்துரைகளை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2022, 11:03 AM IST
  • முதலீட்டுக்கான சிறந்த எஸ்ஐபி.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் பம்பர் ரிட்டர்ன்களைப் பெற்றுள்ளனர்.
  • இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பம்பர் வருமானத்தைப் பெறலாம்.
Best SIP: பம்பர் வருமானம் பெற இந்த 3 எஸ்ஐபி-களில் முதலீடு செய்யுங்கள் title=

முதலீட்டுக்கான சிறந்த எஸ்ஐபி: முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அபரிமிதமான வருமானத்திற்கான சிறந்த தேர்வாக முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) கருதப்படுகிறது. எஸ்ஐபி கடந்த சில ஆண்டுகளில் நல்ல வருமானத்தை அளித்துள்ளது. 

இதன் காரணமாக எஸ்ஐபி இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. குறைந்த முதலீட்டில் இதைத் தொடங்கலாம் என்பது இதன் பிரபலத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். கூடுதலாக, இதில் முதலீடு செய்வதும் பாதுகாப்பானது. குறைந்த முதலீட்டில், உங்கள் பட்ஜெட்டில் எந்த சுமையும் ஏற்படாமல், நீண்ட காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பை இது உருவாக்கும். 

கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் பம்பர் ரிட்டர்ன்களைப் பெற்றுள்ளனர்

நீங்கள் இன்னும் முதலீடு செய்யத் தொடங்காமல் இருந்து எதிர்காலத்தில் முதலீடு செய்யும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், சிறந்த செயல்திறன் கொண்ட சில எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான பரிந்துரைகளை இந்த பதிவில் காணலாம்.

இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பம்பர் வருமானத்தைப் பெறலாம். இந்த எஸ்ஐபி-கள் கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு பம்பர் ரிட்டர்ன்களை வழங்கியுள்ளன.

மேலும் படிக்க | Mutual Funds: பாதுகாப்பான முறையில் பணத்தை அள்ளலாம்: எளிய முதலீட்டு டிப்ஸ் இதோ

1. ஐசிஐசிஐ புருடென்ஷியல் டெக்னாலஜி ஃபண்ட்

ஐசிஐசிஐ புருடென்ஷியல் டெக்னாலஜி ஃபண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் 42.1 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6,887 கோடி ஆகும். என்ஏவி ரூ.163. இந்த ஃபண்டுக்கு ஆராய்ச்சி நிறுவனமான கிரிசில் 3 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகியவை அதன் முதல் 5 ஹோல்டிங்குகள் ஆகும்.

2. டாடா டிஜிட்டல் இந்தியா ஃபண்ட்

டாடா டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் 39.4 சதவீத வருவாயை அளித்துள்ளது. இந்த நிதியின் மொத்த சொத்துக்கள் 3842 கோடிகள் ஆகும். என்ஏவி ரூ 38.2 ஆகும். இந்த ஃபண்டின் செலவு விகிதத்தைப் (எக்ஸ்பன்ஸ் ரேஷியோ) பற்றி பேசுகையில், இது 2.02 சதவீதமாக உள்ளது. இதில் ரூ.500 முதல் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா லிமிடெட் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவை இந்த ஃபண்டின் முக்கிய பங்குகளாகும்.

3. ஆதித்ய பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட்

ஆதித்ய பிர்லா சன் லைஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் 40.5 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2658 கோடி ஆகும். என்ஏவி ரூ.140. ஃபண்டின் செலவு விகிதம் 2.19 சதவீதமாக உள்ளது. இதில் 1000 ரூபாயில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா லிமிடெட் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவை இந்த ஃப்ண்டின் முதன்மையான பங்குகளாகும்.

4. எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்சூனிடிஸ் ஃபண்ட் 

கடந்த மூன்று ஆண்டுகளாக எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்சூனிடிஸ் ஃபண்டின் வருமானத்தைப் பற்றி பேசுகையில், அது 36.6 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1891 கோடி மற்றும் என்ஏவி ரூ.156 ஆகும். 500 ரூபாயில் இந்த ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இதன் செலவு விகிதம் 2.27 சதவீதமாகும். இன்ஃபோசிஸ் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட், ஆல்பாபெட் இன்க்., டெக் மஹிந்திரா லிமிடெட் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவை அதன் முக்கிய பங்குகளாகும்.

(பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது ஆபத்துக்கு உட்பட்டது. எந்த வகையான முதலீட்டையும் செய்வதற்கு முன், தயவுசெய்து ஒரு நிபுணரை அணுகவும்.)

மேலும் படிக்க | PPF vs Mutual Funds: உங்களுக்கு ஏற்ற முதலீட்டு முறை எது? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News