Children's Day 2024 : குழந்தைகள் அனைவருமே, இந்த சமுதயாத்தால் கொண்டாடப்பட வேண்டிய குட்டி மனிதர்கள். எதிர்கால இந்தியாவே, வருங்கால இளைஞர்கள் கைகளில் இருக்கும் நிலையில், அவர்கள் நவம்பர் 14ஆம் தேதியான இன்று சிறப்புற உணர வைப்பது அனைவரது கடமையாகும். இப்போது வளர்ந்துள்ள நம் அனைவருக்குமே பள்ளி பருவத்தில் ஏதேனும் ஒரு நாளில் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய நினைவு இருக்கும். அந்த நாளை குறிவைத்து கட்டுரைப்பாேட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற சிறப்புமிகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
குழந்தைகள் தினம் என்றவுடன் தவறாமல் நினைவுக்கு வருபவர், முன்னாள் இந்திய பிரதமர், ஜவஹர்லால் நேரு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற இவர், 1889ஆம் ஆண்டு பிறந்தார். 1964ஆம் ஆண்டு, 74வது வயதில் நேரு உயிர்நீத்த பிறகு அவரது பிறந்தநாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அது ஏன்?
நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாட காரணம்:
நேருவிற்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். “அதோ பாரு ரோடு..ரோடு மேல காருக்குள்ள யாரு..நம்ம மாமா நேரு..”எனும் பாடல் 90ஸ் கிட்ஸ்களுக்கு அச்சு பிசிராமல் மனதில் நிற்க காரணம், அத்தனை முறை அதை பள்ளிக்காலங்களில் பாடியிருப்போம்.
நேரு, குழந்தைகள்தான் ஒரு நாட்டின் அடித்தளம் என நம்பியவர். இதனால், அனைவரும் சிறு வயதில் இருந்து கல்வி கற்றால்தான் நாடு முன்னேறும் என்பதை அனைத்து இடங்களிலும் வலியுறுத்தி கூறி வந்தார். நாட்டின் கனவுகளை ஏந்தும் குழந்தைகளை போற்ற வேண்டும் என்று விரும்பியவர் அவர். இதனால்தான், நேருவின் இறப்பிற்கு பிறகு அவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேருவை, அவர் மீது இருந்த பாசத்தால் பலர் ‘நேரு மாமா’ என்று அழைத்தனர். மேற்கூறிய பாடல் தோன்றக்கூட இதுதான் காரணம். இந்தியில் இவரை “சாச்சா நேரு” என்று அழைப்பார்களாம்.
விழிப்புணர்வு:
வருடா வருடம் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த குழந்தைகள் தினம், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படுகிறது. இந்த நாளில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், என்.ஜி.ஓ-களில் பல்வேறு கல்வி தொடர்பான போட்டிகள் நடைபெறுகின்றன.
மேலும் படிக்க | குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் 8 நார்மல் பழக்கங்கள்!!
கதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, படம் வரைதல், பேச்சுப்போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது, ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் படைப்பாற்றல் திறனையும், தன்னம்பிக்கையையும் வெளிக்கொணர வைக்கும் வகையில் நடத்தப்படுகிறது.
14 வயதுக்கு கீழ் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி கிடைக்க வேண்டும் என்கிற கொள்கையை வலியுறுத்துவதும் இந்த நாளின் நோக்கமாக இருக்கிறது. பள்ளி படிப்பு மட்டுமல்ல, உணர்வு மற்றும் சமூக ரீதியாகவும் குழந்தைகள் வளர உதவ வேண்டும் என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது.
குழந்தைகளுக்கான உரிமைகளை வலியுறுத்துவதோடு மட்டுமன்றி, குழந்தை தொழிலாளர்களை ஒழித்தல், குழந்தைகள் பாதுகாப்பு போன்ற கொள்கைகளையும் இந்த நாள் வலியுறுத்துகிறது. நகரம் அல்லாத ஒரு சில பகுதிகளில், சில அரசு சாரா அமைப்புகள் (NGO) குழந்தை கல்வியின் சிறப்பை எடுத்துரைக்க செய்கின்றன. கூடவே மருத்துவ முகாம்களை கூட நடத்துகின்றன.
மேலும் படிக்க | இன்று குழந்தைகள் தினம்! சுவாரசிய தகவல்கள் இதோ!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ