பொதுத்துறை வங்கிகளை இணைப்பது தொடர்பாக அக்டோபர் 22 (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்தத்திற்கு பொதுத்துறை வங்கி தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகியவை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
"குறித்த நிகழ்வில், கிளைகளின் செயல்பாடு பாதிக்கப்படலாம் அல்லது செயலிழக்கக்கூடும்" என்று பாங்க் ஆப் பரோடா பங்குச் சந்தைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 9,500 கிளைகளைக் கொண்ட BoB, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாகும்.
All India Bank Employees Association (AIBEA) and Bank Employees Federation of India (BEFI) have called an all-India bank strike on October 22 in protest against the mergers of 10 public sector banks.
— ANI (@ANI) October 20, 2019
என்றபோதிலும், வேலைநிறுத்தத்தின் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும் என்று SBI தெரிவித்துள்ளது. இதுகுறித்து SBI தெரிவிக்கையில்., "வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களில் எங்கள் வங்கி ஊழியர்களின் உறுப்பினர் எண்ணிக்கை மிகக் குறைவு, எனவே வங்கியின் செயல்பாட்டில் வேலைநிறுத்தத்தின் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும்" என்று பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தின் காரணமாக ஏற்படும் தாக்கத்தை தற்போது மதிப்பிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக பாங்க் ஆப் மகாராஸ்ட்ரா தெரிவிக்கையில்., "அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு ஆதரவாக 22.10.2019 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேற்கண்ட வேலைநிறுத்தம் தொழில் மட்டத்தில் உள்ளதே தவிர வங்கி மட்ட பிரச்சினையில் அல்ல" என பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ளது.
AITUC ஒரு அறிக்கையில் குறிப்பிடுகையில்., 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு "துரதிர்ஷ்டவசமான" அல்லது முற்றிலும் "தேவையற்றது" என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, மத்திய அரசு 10 பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைப்பதற்கான ஒரு மெகா திட்டத்தை அறிவித்தது, குறைந்த மற்றும் வலுவான உலகளாவிய அளவிலான கடன் வழங்குநர்களை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஐந்தாண்டு குறைவிலிருந்து உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது.