Alert: இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு 2 நாட்கள் ATM பரிவர்த்தனையில் பிரச்சனை வரலாம்

ஆன்லைன் முறையின் பராமரிப்பு காரணமாக, ATM, டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு சேவை ஆகியவை நாடு முழுவதும் பாதிக்கப்படும் என்று IDBI வங்கி தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2020, 07:46 PM IST
  • IDBI வங்கி முக்கிய அறுவிப்பை அளித்துள்ளது.
  • இரண்டு நாட்களுக்கு ATM சேவைகள் மூடப்படும்.
  • செய்தி அனுப்பி வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதை தெரிவித்தது.
Alert: இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு 2 நாட்கள் ATM பரிவர்த்தனையில் பிரச்சனை வரலாம் title=

IDBI வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பி, அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் ATM சேவைகள் சிறிது நேரத்திற்கு மூடப்படும் என்று எச்சரித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக, அதன்ATM சேவை ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், அதாவது டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு மணி நேரம் மூடப்படும் என்று வங்கி தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு சேவையும் பாதிக்கப்படும்.

ஆன்லைன் முறையின் பராமரிப்பு காரணமாக, ATM, டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு சேவை ஆகியவை நாடு முழுவதும் பாதிக்கப்படும் என்று IDBI வங்கி (IDBI Bank) தெரிவித்துள்ளது.

எப்போது சேவைகள் மூடப்படும்

டிசம்பர் 13 ம் தேதி மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், டிசம்பர் 14 ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையிலும் இந்த சேவைகள் மூடப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு, அனைத்து சேவைகளும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கும்.

ATM பரிவர்த்தனை தோல்வியுற்றால் வங்கி இழப்பீடு செலுத்தும்

ATM-களில் இருந்து பணத்தை எடுக்கும்போது பரிவர்த்தனைகள் தோல்வியடையும் சிக்கல்களை மக்கள் அடிக்கடி எதிர்கொள்கின்றனர். பணம் எடுப்பவரின் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படுகிறது. ஆனால் ATM-மில் இருந்து பணத்தை எடுக்க முடிவதில்லை. இருப்பினும், இந்த பணம் பின்னர் உங்கள் வங்கிக் கணக்கில் திரும்பப் போடப்படுகிறது.

ஆனால் பல முறை மக்கள் இதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகளின்படி, புகார் அளித்த 7 நாட்களுக்குள் வங்கி உங்கள் கணக்கிற்கு பணத்தை திருப்பி அனுப்ப வேண்டும். நீங்கள் உங்கள் பணத்தை சரியான நேரத்தில் திரும்பப் பெறாவிட்டால், வங்கி உங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும்.

ALSO READ: 5 லட்சம் வரையிலான gold voucher வெல்ல வாய்ப்பு: TATA Motors-ன் அற்புத offer

RTGS சேவை 24 மணிநேரமும் 365 நாட்களும் கிடைக்கும்

ரிசர்வ் வங்கியின் ஆன்லைன் பணப் பரிமாற்ற முறையான நிகழ்நேர மொத்த தீர்வு, அதாவது RTGS வசதி 24 மணி நேரமும் இயங்கப் போகிறது. RTGS வசதி 14 டிசம்பர் 2020 முதல் 24x365, அதாவது 365 நாட்களும் 24 மணி நேரமும் மக்களுக்குக் கிடைக்கும்.

ஆன்லைன் வங்கி நிதி பரிமாற்றத்தின் RTGS சேவை திங்கள் முதல் 24 மணி நேரமும் 365 நாட்களும் கிடைக்கும். இதன் மூலம் பண பரிவர்த்தனையைப் பொறுத்த வரை மக்களுக்கு பெரிய உதவி கிடைக்கும். அவசர காலங்களில் அவர்கள் இனி தடையில்லாமல் எப்போது வேண்டுமானாலும் பண பரிமாற்றத்தில் ஈடுபடலாம்.

ALSO READ: Good news: ஏராளமான வேலை வாய்ப்புடன் தமிழகத்தில் வரவுள்ளது Tata-வின் mobile parts plant

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News