வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, மைக்ரோ ஏடிஎம்களை விரைவாக அமைக்க ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, 1.5 லட்சம் மைக்ரோ ஏடிஎம்களை Tier-II வகை நகரங்கள் மற்றும் செமி நகர்ப்புறங்களில் பணம் எடுப்பதற்கு ஏற்ப இந்த வசதியை கொண்டுவர உள்ளது.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, தங்களுடைய சேவையை விரிவுபடுத்த தொடங்கியுளது. முதற்கட்டமாக டையர் 2 நகரங்கள் மற்றும் செமி நகர்புற பகுதிகளில் 1.5 லட்சம் யூனிட்களை தொடங்க இருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கும்போது, இந்தப் பகுதிகளில் பொதுவாக பணம் எடுக்கும் சேவைகளுக்கு அதிக தேவை உள்ளதாகவும், ஆனால் ஏடிஎம்களுக்கான அணுகல் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளது.
டார்கெட் மார்ச்
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தை டார்க்கெட்டாக வைத்துள்ளது. அதற்குள் நாடு முழுவதும் 1.5 லட்சம் மைக்ரோ ஏடிஎம்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டிற்குள் 1.5 லட்சம் ஏடிஎம்கள் நிறுவப்பட இருக்கின்றன. இதனையொட்டி ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, NPCI, NFS-ன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஏடிஎம்கள் என்றால் என்ன?
மைக்ரோ ஏடிஎம் என்பது கார்டு ஸ்வைப் மெஷின் போன்ற சிறிய இயந்திரம். இந்த இயந்திரம் தேவையான வங்கி வசதியை வழங்கும் திறன் கொண்டது. அத்தகைய ஏடிஎம்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!
மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ