Ponzi scam: ரூ. 100 கோடி பொன்சி ஊழல் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு ED சம்மன்

Pranav Jewellers scam: நகைக்கடை நிறுவனம் நடத்திய ரூ.100 கோடி பொன்சி திட்டம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2023, 08:34 PM IST
  • நகைக்கடை விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ்
  • பொன்சி திட்ட மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை
  • பிரணவ் ஜூவல்லர்ஸ் பொன்சி மோசடி விசாரணை
Ponzi scam: ரூ. 100 கோடி பொன்சி ஊழல் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு ED சம்மன் title=

சென்னை: போன்சி என்ற பெயரில் நகை திட்டத்தை நடத்தி முதலீட்டாளர்களிடம் ₹ 100 கோடி மோசடி செய்ததாக பிரணவ் நகைக்கடை மீது குற்றச்சாட்டு பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் என்பதால் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரகாஷ்ராஜ்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

0% செய்கூலி, சேதாரம் என கூறி மோசடி.. தலைமறைவான பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு..
மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் திருச்சி, மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லரி என்கிற நகைக்கடை இயங்கி வந்தது. வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான தங்கம் மற்றும் பணத்தை முதலீடு பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து பிரணவ் ஜுவல்லரி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 0% செய்கூலி, சேதாரம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்துடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது தான் பிரணவ் ஜுவல்லரி.

மேலும் படிக்க | ICICI வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்தன! FD வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த ஜுவல்லரி குறுகிய காலத்திலேயே மதுரை, கும்பகோணம், கோவை, ஈரோடு, சென்னை என பல இடங்களை கிளைகளை தொடங்கியது. 5 லட்சம் முதலீடு செய்தால் 2% வட்டி, 10 மாதங்களுக்கு பிறகு செய்கூலி சேதாரமின்றி 106 கிராம் நகை பெறலாம் என பல அதிரடி விளம்பரங்களை செய்தது. 

பழைய நகைகளை கொடுத்தால், ஒரு வருடம் கழித்து செய்கூலி, சேதாரமின்றி பழைய நகைகளின் எடைக்கு சமமாக புதிய நகைகளை பெறலாம் என்றும் விளம்பரம் செய்தது. இதனால் பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளிலும் பணத்தை முதலீடு செய்தனர். மேலும் பழைய நகைகளை கொடுத்து, ஒரு வருடம் கழித்து புதிய நகைகளை வாங்கலாம் என்று ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் பிரணவ் ஜுவல்லரி நிறுவனம், தனது நகைக்கடைகளை அடுத்தடுத்து மூடியது. புகாரை அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கடையின் பூட்டை உடைத்து ஆய்வு மேற்கொண்டபோது, நகைக்கடையில் ஒரு நகையும் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் படிக்க | தங்க நகை சீட்டு மூலம் மோசடி! பிரணவ் ஜூவல்லரியில் பூட்டை உடைத்து ஆய்வு!

இதை தொடர்ந்து பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நகைக்கடை நிறுவனம் நடத்திய ரூ.100 கோடி பொன்சி திட்டம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

திருச்சியை தலைமையிடமாக கொண்ட பிரணவ் நகைக்கடையின் பிராண்ட் அம்பாசிடராக பிரகாஷ் ராஜ் செயல்பட்டு வநதார். பிரணவ் ஜூவல்லர்ஸ் மக்களிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக புகார்  தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜூக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! புதுவகை நிமோனியா? கோவிட் அச்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News