பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ்

Retirement Planning: ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வதற்கு முன், அந்த வயதில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2024, 07:30 PM IST
  • வயதான காலத்தில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கண்டறியவும்.
  • உங்கள் போர்ட்ஃபோலியோவில் பல்வேறு வகைகளை வைத்திருங்கள்.
  • 20 சதவீத சேமிப்பு விதியை நினைவில் கொள்ளுங்கள்.
பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ் title=

Retirement Planning: அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. அதுவும் முதுமையில் இந்த தேவை சற்று அதிகமாகிறது. அந்த காலத்தில் இளமையில் செய்வது போல பணம் ஈட்ட முடியாது என்பதால், முதுமையை நிம்மதியாக கழிக்க, இள வயதிலேயே அதற்கான திட்டமிடுவது அவசியமாகின்றது. உங்கள் பணியுடன் சேர்ந்து உங்கள் ஓய்வூதியத் திட்டமிடலைத் தொடங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். 

இருப்பினும், ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வதற்கு முன், அந்த வயதில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டமிடலைச் செய்ய வேண்டும். ஓய்வூதிய திட்டமிடலுக்கு முன் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான 4 விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

வயதான காலத்தில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கண்டறியவும்

இன்று நாம் 1 கோடி ரூபாய் என்று கூறினால், ​​அது மிகப்பெரிய தொகையாக நமக்குத் தோன்றலாம். ஆனால், சில வருடங்கள் கழித்து அதன் மதிப்பு பெரிதாக இருக்காது. இதை மனதில் வைத்துக்கொண்டு, உங்களின் ஓய்வு பெறும் வயதில் நல்ல மதிப்பைக் கொண்டிருக்கும் தொகையை நீங்கள் சேர்க்க வேண்டும். அதற்கேற்ப உங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டு உத்தியை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் உங்கள் டெபாசிட் செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை எப்படி அறிவது? இதற்கு 70 விதி (Rule of 70) உங்களுக்கு உதவும். 

உங்கள் டெபாசிட் செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்பு எவ்வளவு காலத்தில் பாதியாகக் குறையும் என்பதை இது சொல்கிறது. இதற்கு நீங்கள் தற்போதைய பணவீக்க விகிதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தற்போதைய பணவீக்க விகிதத்தை 70 ஆல் வகுத்தால், வெளிவரும் எண் உங்கள் மொத்த திரட்டப்பட்ட மூலதனத்தின் மதிப்பு எத்தனை ஆண்டுகளில் பாதியாகக் குறையும் என்பதைத் தெரிவிக்கும்.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்

தற்போதைய பணவீக்க விகிதம் 6 சதவீதம் என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், சூத்திரத்தைப் பயன்படுத்தி 70 ஐ 6 ஆல் வகுத்தால் 70/6 = 11.66 என வரும். அதாவது உங்கள் சேமிப்பின் மதிப்பு சுமார் பதினொன்றரை ஆண்டுகளில் பாதியாகக் குறைக்கப்படும். அதாவது, இன்றைக்கு உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தேவை என்றால், இன்னும் பதினொன்றரை வருடங்கள் கழித்து நல்ல வாழ்க்கை வாழ இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும். ஏனெனில் அப்போது ஒரு கோடி ரூபாயின் மதிப்பு 50 லட்சம் ரூபாயாக இருக்கும். இவ்வாறு கணக்கிட்டு, ஓய்வு பெறும் வயது வரை உங்களுக்காக எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்று கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.

காம்பவுண்டிங்கின் சக்தி

ஓய்வு பெறுவதற்குள் எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்ற புரிதல் உங்களுக்கு இருந்தால், அந்தத் தொகையை சேமிப்பாக சேமித்து முதலீடு செய்ய வேண்டும். கூட்டு வட்டியின், அதாவது காம்பவுண்டிங்க் வட்டியின் பலன் கிடைக்கும் இடங்களில் முதலீடு செய்யுங்கள். முதலீடுகளை செல்வமாக மாற்றும் திறன் காம்பவுண்டிங்கிற்கு உள்ளது. இதில், முதலீட்டுத் தொகையுடன் அதன் வட்டிக்கும் வட்டி கிடைக்கும். 

மேலும் படிக்க | ஆயுள் சான்றிதழ் குறித்து மத்திய அரசின் முக்கிய அப்டேட்: ஓய்வூதியம் பெறுவோருக்கான சமீபத்திய தகவல்

நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக கூட்டுத்தொகை மூலம் நீங்கள் பலன் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு வேலையைத் தொடங்கியவுடன், PPF, NPS, SIP போன்ற கூட்டுப் பலன்களை வழங்கும் திட்டங்களில் முடிந்தவரை முதலீடு செய்யுங்கள். இது தவிர, வேலை செய்பவர்கள் VPF மூலம் EPF இல் தங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம். மேலும் இதன் மூலம் அவர்கள் ஒரு நல்ல ஓய்வூதிய நிதியைச் சேர்க்கலாம்.

உங்கள் போர்ட்ஃபோலியோவில் பல்வேறு வகைகளை வைத்திருங்கள்

அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது என்பார்கள். முதலீட்டு விஷயத்திலும் இதே விதி பொருந்தும். எனவே, உங்கள் சேமிப்புகள் அனைத்தையும் ஒரே திட்டத்தில் முதலீடு செய்யாதீர்கள். அந்தப் பணத்தைப் பிரித்து வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். இது ஒரு பாதுகாப்பான மற்றும் புத்திசாலியான முதலீட்டு முறையாக பார்க்கப்படுகின்றது. இந்த விஷயத்தை கவனமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

20 சதவீத சேமிப்பு விதியை நினைவில் கொள்ளுங்கள்

முதல் வருமானம் கிடைத்தவுடன் சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு, 20 சதவீத விதியை மனதில் கொள்ளுங்கள். ஒவ்வொரு நபரும் தனது வருமானத்தில் 20 சதவீதத்தை சேமித்து முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி விதியில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, உங்கள் சம்பளம் ரூ.40,000 என்றால், அதில் ரூ.8,000 எப்படி இருந்தாலும் முதலீடு செய்ய வேண்டும். சம்பளம் அதிகரிக்கும் போது, ​​உங்கள் பங்கு 20 சதவீதமும் அதிகரிக்கும். இந்த விதியைப் பின்பற்றி முதலீடு செய்தால், 25 முதல் 30 ஆண்டுகளில் நல்ல தொகையைச் சேர்க்கலாம்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு டிஆர் உயர்வு: அரியர் தொகை எவ்வளவு? யாருக்கெல்லாம் ஓய்வூதியம் அதிகரிக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News