7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த தேதியில் அறிவிப்பு

7th Pay Commission: இம்முறை அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து அறிவிப்பை வெளியிடக்கூடும். அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 31, 2022, 02:59 PM IST
  • 7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி.
  • அகவிலைப்படி 38 சதவிகிதமாக அதிகரிக்கும்.
  • அடிப்படை ஊதியம் ரூ.31550 ஆக இருந்தால், சம்பளம் எவ்வளவு உயரும்?
7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த தேதியில் அறிவிப்பு title=

7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல தகவல் வந்துள்ளது. உங்கள் காத்திருப்பு விரைவில் முடிவடையவுள்ளது. நவராத்திரியின் போது ஊழியர்களுக்கு அதிகரித்த அகவிலைப்படி பரிசாக கிடைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

செப்டம்பர் 28 அன்று அறிவிக்கப்படும்

அகவிலைப்படி பற்றிய முறையான அறிவிப்பு செப்டம்பர் 28 அன்று அதாவது நவராத்திரியின் மூன்றாவது நாள் வெளியிடப்படக்கூடும். அதன் பிறகு, அக்டோபர் 1 முதல், ஊழியர்களின் டிஏ 38 சதவீதமாக உயரும். இதனுடன், கடந்த இரண்டு மாத நிலுவைத் தொகையும், அக்டோபரில் கிடைக்கும்.

அகவிலைப்படி 38 சதவிகிதமாக அதிகரிக்கும்

இம்முறை அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து அறிவிப்பை வெளியிடக்கூடும். அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும். பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்ட டிஏ அமலுக்கு வந்தால், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 2 மாதப் பணம் நிலுவைத் தொகையாகப் பெறப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு வரும் ரூ. 21622! 

அடிப்படை ஊதியம் ரூ.31550 ஆக இருந்தால், சம்பளம் எவ்வளவு உயரும்?

7வது ஊதியக்குழுவின் படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.31550 ஆக இருந்து, அகவிலைபப்டி 38 ஆக உயர்ந்தால், சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்

உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் (டிஏ கணக்கீடு):

அடிப்படை சம்பளம் - ரூ 31550
அகவிலைப்படி 38 சதவீதம் - ரூ 11989
தற்போதுள்ள டிஏ - 34% - ரூ 10727
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் - 4 சதவீதம்
மாத சம்பள உயர்வு - ரூ.1262
ஆண்டு ஊதிய உயர்வு - ரூ.15144

18000 அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்?

இது தவிர, உங்கள் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில், உங்கள் டிஏவில் மொத்தம் ரூ.6840 அதிகரிக்கும், அதாவது மாதாந்திர அகவிலைப்படி பற்றி பேசினால், உங்கள் சம்பளம் ரூ.720 அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 8-வது ஊதியக் குழுவால் மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மை கிடைக்குமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News