18 மாத டிஏ நிலுவைத் தொகைக்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான டிஏவை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நெடுங்காலமாகவே அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
கோவிட் தொற்றுநோய் பரவலின் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் டிஏ உயர்வை ஜனவரி 2020 முதல் ஜூன் 30, 2021 வரையில் நிதி அமைச்சகம் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, டிஏ நிலுவைத் தொகையை ஒன்-டைம் முறையில் வழங்குவது குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டம் நடத்தப்படும் என்றும், ஊழியர்களின் தரத்தை பொறுத்து, டிஏ நிலுவைத் தொகையாக ரூ.2 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு வழங்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு அவர்களுக்கு 17 சதவீத ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில், அக்டோபர் 2021 இல், இது 3 சதவீதமாகவும் 31 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. மேலும் அதே மார்ச் 2022-ல், ஊழியர்களுக்கான அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR