தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: TN Govt

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு என்ற புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்!!

Last Updated : Sep 16, 2019, 01:41 PM IST
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: TN Govt title=

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு என்ற புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்!!

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு விதிக்கப்படும் என்று புதிய மின்சார வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு செய்துள்ளது. 

தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான இலக்குகளை இந்தியா வகுத்துள்ளது. சமீபத்தில் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில்; மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்துள்ளார். இந்நிலையில் மின்சார வாகனங்களுக்கான தமிழக அரசின் கொள்கை முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த முடிவால் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறையும் எனக் கூறப்படுகிறது.   

 

Trending News