Viral Marriage: பொம்மையை கல்யாணம் செய்த பெண்: குழந்தையும் பிறந்தது

வாழ்க்கையில் சண்டையே போடாத கணவர், வாயே திறக்காத குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்வதாக சொல்லும் பெண்: காரணம் கணவர் பொம்மையாம்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 23, 2022, 07:54 PM IST
  • வாழ்க்கையில் சண்டையே போடாத கணவர்
  • வாயே திறக்காத குழந்தை
  • பொம்மைக் கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழும் பெண்
Viral Marriage: பொம்மையை கல்யாணம் செய்த பெண்: குழந்தையும் பிறந்தது title=

37 வயதான பெண் ஒருவர் பொம்மையை 'திருமணம்' செய்துக் கொண்டார். தற்போது குழந்தையும் பிறந்துள்ளது. அதிசயமான செய்தியாக இது வைரலாகிறது. 

பிரேசிலை சேர்ந்த பெண் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மார்செலோ ரோச்சா மோரேஸ் (Meirivone Rocha Moraes) என்ற பெண் பொம்மையை திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் வருகை, வாழ்க்கையை முழுமையடையச் செய்ததாக  அவர் தெரிவிக்கிறார்.

 தன் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருப்பதாக அவர் சொல்கிறார். காதல் என்பது மிக அழகான உணர்வு என்று சொல்லும் இந்த 37 வயது பெண், பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்...

இந்த ஜோடிக்கு இப்போது ஒரு குழந்தை உள்ளது என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. Meirivone Rocha Moraes என்ற பெண்ணுக்கு, மார்செலோ என்ற பொம்மையை அவரது தாயார் அறிமுகப்படுத்தினார்,

அந்தப் பெண்ணுக்கு நடனமாடுவதற்கு கூட்டாளி இல்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட பொம்மை ஆண் அது. பொம்மைக் கணவர் ஒருபோதும் சண்டையிடுவதில்லை என்றும், தன்னை புரிந்துகொள்வதால் தான் எப்போதும் விரும்பும் மனிதனாக தனது கணவர் இருப்பதாக மோரேஸ் கூறினார். "மார்செலோ ஒரு சிறந்த மற்றும் உண்மையுள்ள கணவர். எல்லா பெண்களும் பொறாமைப்படும் அளவுக்கு அவர் ஒரு மனிதர்,” என்று அவர் மேலும் கூறினார்.

தங்கள் திருமணம் தொடங்கியது சென்றது முதல் இறுதி வரைமிகவும் அழகாக இருந்தது. பின்னர் எனது கணவர் மார்செலோவுடன் திருமண இரவுக்குச் சென்றோம், நாங்கள் எங்கள் திருமண இரவை மிகவும் ரசித்தோம் என்று மோரேஸ் கூறுகிறார்.

தற்போது, ​​ஒரு குழந்தை பொம்மை பிறந்ததை வரவேற்றுள்ள தம்பதியருக்கு குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் கிடைத்துள்ளார். தனது குழந்தையின் வரவை சுமார் 200 பேருடன் கொண்டாடிய மோரேஸ் அந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பினார்.

பொம்மைக் கணவரைப் போலவே, மோரேஸின் குழந்தையும் ஒரு பொம்மை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News