பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துக் கொண்டிருக்கிறது. பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (2024, பிப்ரவரி 8) நடைபெற்றது. அந்த வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு முதல் நாள் (பிப்ரவரி 7) மாலை பாகிஸ்தானில் நடைபெற்ற இரண்டு பெரிய பயங்கரவாத சம்பவங்களில் 28 பேர் பலியானர்கள். இப்படி பதற்றமான சூழ்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
பாதுகாப்பு நிலைமையை காரணம் காட்டிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் மொபைல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. கடுமையான பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தேர்தல் பணியை தொடர வேண்டுமா என்பது பற்றிக்கூட ஆலோசித்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இருந்தாலும், நிலைமையை சமாளிக்க முடிவு செய்த தேர்தல் அதிகாரிகள், மொபைல் நெட்வொர்க், இணையதளத்திற்கு தடை விதித்ததுடன், பாதுகாப்பை பலப்படுத்தினார்கள்.
இருந்தபோதிலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, தேர்தல் நாளில் 56 பயங்கரவாத சம்பவங்கள் நடந்தன.
பல பிரச்சனைகள் இருந்தாலும், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்
பல இடங்களில் போட்டியிட்ட நவாஸ் ஷெரீப், மன்சேரா தொகுதியில் தோல்வியடைந்தார். சுயேச்சை வேட்பாளரிடம் முன்னாள் பிரதமர் படுதோல்வி அடைந்தது யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. பிடிஐ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் குஸ்டாசப் கான், மன்செரா தொகுதியில் நவாஸ் ஷெரீப்பை தோற்கடித்தார். பாகிஸ்தான் ஊடக அறிக்கையின்படி (அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்), சுயேட்சை குஸ்டாப் கான் 1,05,249 வாக்குகள் பெற்றார் என்றும், நவாஸ் ஷெரீப் 80,382 வாக்குகள் பெற்றார்.
பிடிஐ ஆதரவு பெற்று தேர்தலில் போட்டியிடும் பல சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளது மக்களின் மனோபாவத்தை உணர்த்துகிறது.
149 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் தெளிவாகியுள்ளன. PTI ஆதரவாளரான சுயேட்சை வேட்பாளர்கள் 61 இடங்களிலும், நவாஸின் PMLN கட்சி 43 இடங்களிலும், பிலாவலின் PPP கட்சி 38 இடங்களிலும், MQM 4 இடங்களிலும், JUIP, BNP மற்றும் PMLQ தலா ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன. இன்னும் 116 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளிவரவேண்டும்.
மேலும் படிக்க | குழந்தைகளை பார்சலில் அனுப்பிய அமெரிக்கர்கள்..! 1,100 கிலோ மீட்டர் பயணித்த குழந்தை
ஜெயிக்கப்போவது யார்?
இன்றைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, இம்ரான் மற்றும் நவாஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிலாவல் பூட்டோவின் கட்சிக்கு சில இடங்கள் கிடைத்தால் கூட்டணி ஆட்சி அமைக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நவாஸ் மற்றும் பிலாவல் கட்சி இடையே கூட்டணி அமையலாம் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் (ECP) தரவுகளின்படி, பாகிஸ்தான் தேர்தலில் 12 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தேசிய மற்றும் மாகாண சட்டசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு 265 தொகுதிகளிலும், மாகாணங்களில் மொத்தம் 590 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பலுசிஸ்தான் மாகாணத்தில் 51, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 130 தொகுதிகளில் 128 இடங்களுக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 297 தொகுதிகளில் 296 இடங்களுக்கும், சிந்து மாகாணத்தில் 130 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேலும் படிக்க | தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நாட்டில் மொபைல் நெட்வொர்க்கை முடக்கிய பாகிஸ்தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ