உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுகும் கடல் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அவசியமானது என்னும் நிலையில், தாய்லாந்தின் மேல் வளைகுடாவின் நான்கில் ஒரு பகுதி கடல் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் தோராயமாக பாதி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. கடல் நீரின் நிறத்தில் காணப்படும் மாற்றங்கள் உலக அளவில் கவலைகளை அதிகரித்துள்ளது.
கடலில் இரசாயனங்கள்,தூசிதுகள்கள், கழிவுப் பொருட்கள் மற்றும் வீட்டுக் கழிவுகள் பரவுவதால், கடலில் ஏற்படும் மாசுபாடு அதிகரித்து வருகிரது. கடல் மாசுபாட்டுக்கான காரணம், அநேகமாக நில அடிப்படையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் எவ்வாறு மாசுபடுகிறது?
தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் கலப்பதனால் நீர் மாசடைகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள், வீட்டுக் கழிவுநீர், சிறுநீர் தேக்கம் போன்றவை கலப்பதனால் நீர் மாசடைகிறது. எண்ணெய், பெட்ரோல், நெகிழி, சலவைத்தூள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என நமது வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட பொருட்கள் கடல்மாசுவை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் மாசுபாட்டின் அச்சுறுத்தல் காலநிலை நெருக்கடிக்குச் சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மிதவைவாழிகள்
தற்போது கடல் மாசுபாட்டின் உச்சமாக, தாய்லாந்தின் மேல் வளைகுடாவின் நான்கில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, தோராயமாக பாதி பச்சை நிறத்தில் காணப்படுகிறது, அதே நேரத்தில் கரைக்கு அருகில் உள்ள மற்ற பகுதி மாசுபாடு மற்றும் மிதவைவாழிகள் என்று அறியப்படும் பிளாங்க்டன் (plankton) இருப்பதால் பழுப்பு நிறமாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு! கங்கை சமவெளியும் விலக்கல்ல
மிதவைவாழிகள், வாழும் சூழ்நிலையை ஒத்து வரையறுக்கப்படுகின்றது. இவ்வரையறைக்கும் அதன் குணத்திற்கும் சம்பந்தமில்லை. இவை பெரும்பாலும் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகின்றன. சிறிய பாக்டீரியாக்கள் முதல் பெரியதான சொறிமுட்டை வரை என பல்வேறு உயிரினங்கள் மிதவைவாழிகள் (plankton) என்று அழைக்கப்படுகின்றன.
மீன் மற்றும் திமிங்கலங்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் பிளாங்க்டனை உணவு ஆதாரமாக நம்பியிருக்கும் நிலையில், , கடல் நீரில் அதிகரிக்கும் பூக்கள் கடல்நீரில் இருக்கும் ஆக்ஸிஜனைக் குறைக்கலாம், இது மீன், மட்டி மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.
தாய்லாந்தின் அழகிய சோன்புரி மாகாணத்தில், மேல் வளைகுடாவின் கடல் நீர் ஜேட்-பச்சை நிறத்தைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த அழகிய நீர், ஒரு இருண்ட ரகசியத்தை மறைக்கிறது. அடர்ந்த மற்றும் மெலிதான புல் மற்றும் அழுகும் மீன்களின் துர்நாற்றத்தை மறைக்கிறது.
அதிகரித்துவரும் கடலில் அதிகரித்துவரும் இந்த இடையூறு சங்கிலி எதிர்வினையை ஏற்படுத்துகிறது, இது இயற்கை உணவுச் சங்கிலிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மீன்வளத்தையும் அழிக்கிறது. இதுவரை இல்லாத அளவு பிளாங்க்டன்களை பார்ப்பது இதுவே முதல் முறை என்றும், இந்த ஆண்டு மிகவும் அதிகரித்துள்ளதாகவும், கடல்சார் விஞ்ஞானி Tanuspong Pokavanich என்பவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தின் மேல் வளைகுடாவின் நான்கில் ஒரு பகுதி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது, தோராயமாக பாதி பச்சை நிறத்தில் காணப்படும் அதே நேரத்தில், கடற்கரைக்கு அருகில் உள்ள மற்ற பகுதி மாசுபாடு மற்றும் இறந்த பிளாங்க்டன்களால் பழுப்பு நிறமாக மாறியுள்ளது என்று விஞ்ஞானி குறிப்பிடுகிறார்.
தண்ணீரில் உள்ள பிளாங்க்டன், ஊட்டச்சத்துக்களையும் உட்கொண்டு செழித்து வளரும், வெளிச்சம் குறைவாக இருந்தால், அவை இறந்துவிடும். அவற்றின் சடலங்கள் பின்னர் கடற்பரப்பில் மூழ்கி சிதைந்துவிடும். இந்த சிதைவு செயல்முறை நீரில் குறைந்த ஆக்ஸிஜன் நிலைமைகளுக்கு பங்களித்து கடல்வாழ் உயிரினங்களை பெரிதும் பாதிக்கிறது.
மேலும் படிக்க | உக்ரைனின் மிகப் பெரிய அணையை தகர்த்த ரஷ்யா...
மீன்வளம் பாதிப்பு
இந்த கடற்கரையோரத்தில், 260 க்கும் மேற்பட்ட கத்தரி விவசாய நிலங்கள் மிதக்கின்றன, அவற்றில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ஏற்கனவே பூக்களின் சுமையை தாங்கியுள்ளன என்று சோன்புரி மீன்பிடி சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
2021 ஆம் ஆண்டில் மீன்வளத் துறையின் தரவுகளின்படி, சோன்புரி பொதுவாக ஆண்டுதோறும் 2,086 டன் (4.6 மில்லியன் பவுண்டுகள்) கடல்சார் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்கிறது, இதன் மதிப்பு 26,655,000 தாய் பாட் ($1 மில்லியன்) ஆகும்.
தற்போது கடலில் நீர் முழுமையாக மாசுபட்டுவிட்டது. நீர் அசையும்போது மிதவைவாழிகள் கீழே விழுகின்றன. அவற்றில் உயிருள்ளவற்றின் அளவு மிகவும் குறைந்துவிட்டன. சிப்பிகள் உட்பட அனைத்தும் இறந்துவிட்டன. பொதுவாக, அவை இங்கே கயிற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று கடல்சார் உணவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நிலைமையின் தீவிரத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.
மரகத வண்ணத்தில் மிளிரும் கடல்நீருக்குப் பின்னால் உள்ள துல்லியமான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. தனுஸ்பாங் போன்ற விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ போன்ற இயற்கை நிகழ்வுகளுக்கான சாத்தியமான தொடர்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற விஷயங்களின் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்வது அவசியம் என்றும் கூறும் விஞ்ஞானிகள், இந்த விஷயத்தில் மெத்தனமாக இருந்தால், பூமியைப் பாதுகாக்க முடியாது என்றும் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க | கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ