வைரல் வீடியோ: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்ட இளம் பெண்!

ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதாமாக 2 வயது குழந்தை விழந்தது. அதிர்ச்சிடைந்த பெற்றோர் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

Last Updated : Nov 4, 2016, 05:41 PM IST
வைரல் வீடியோ: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்ட இளம் பெண்! title=

ரஷ்யா: ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதாமாக 2 வயது குழந்தை விழந்தது. அதிர்ச்சிடைந்த பெற்றோர் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை காப்பாற்றுவதற்காக அருகில் பள்ளம் தோண்டி காப்பாற்ற முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை. பிறகு தீயணைப்பு படையினர் அருகில் இருந்த 17 வயது சிறுமியை ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்ட சிறுமிக்கு சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே சிறுமியை மேலே கொண்டு வரப்பட்டார். சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அச்சிறுமி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டார். சிக்கித் தவித்த 2 வயது குழந்தையை மீட்டு வெளியே வருகிறார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பார்க்க:-

Trending News