சிறுபான்மையினருக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீண்டகால நடைமுறையை முறியடித்து, பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை செய்துள்ளது.
ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், ஆறு நீதிபதிகள் இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை தடை செய்ய ஆதரித்த நிலையில், மூன்று நீதிபதிகள் மட்டுமே மறுப்பு தெரிவித்த நிலையில், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தடையை உறுதி செய்தார்.
சிவில் உரிமைகள் இயக்கத்தின் போது தோன்றிய உயர்கல்வி மாணவர் சேர்க்கை விதிகள், பல தசாப்தங்களாக தொடர்ந்த சாதி மத பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட உறுதியான செயல் கொள்கைகளை கொண்டது, அதை இந்த தீர்ப்பு மாற்றியமைக்கிறது.
இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கூறும் நிலையில், சமூக நீதி தொடர்பான கவலைகளையும் பலரும் எழுப்புகின்றனர். இந்த நிலையில், இட ஒதுக்கீடு முறை கல்வியில் மிகவும் முக்கியமான காரணியாக இருக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், இந்தத் தீர்ப்பை விரிவாக புரிந்துக் கொள்வது அவசியமாகிறது.
இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை தடை செய்யும் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியமான விஷயங்கள் இவை.
மேலும் படிக்க | டைட்டன் நீர் மூழ்கி கப்பல் பாகங்களில் மனித எச்சங்கள்.. நிபுணர்கள் அளித்த தகவல்!
அமெரிக்காவில் கல்வி சேர்க்கை
பல்கலைக்கழகத்தில் இனம் மற்றும் சாதி அடிப்படையிலான சேர்க்கைக்கு தடை செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிறுபான்மையினருக்கு, குறிப்பாக ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீண்டகால நடைமுறையில் இருந்து விலகுவதைக் குறிக்கிறது.
நீதிபதிகளின் ஆதரவும் எதிர்ப்பும்
ஆறு நீதிபதிகள் தடையை ஆதரித்தும், மூன்று பேர் தடையை எதிர்த்தும் வாக்களித்தனர். இது அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய பழமைவாத ஆதரவு தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்க வேண்டிய ஒன்று.
பல்கலைக்கழக சேர்க்கை
உறுதியான நடவடிக்கை (affirmative action) என்பது பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் வரலாற்று பாகுபாடுகளை நிவர்த்தி செய்யும் கொள்கைகளை குறிக்கிறது. இது 1960 களில் சிவில் உரிமைகள் இயக்கத்தின் போது தோன்றியது மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், பெரும்பான்மையினரின் ஆதரவின் அடிப்படையில் தீர்ப்பை எழுதினார். உறுதியான நடவடிக்கையின் (affirmative action) நல்ல நோக்கத்தை ஒப்புக்கொண்டார், ஆனால் அது அரசியலமைப்பிற்கு எதிரான பாகுபாடு என்று தலைமை நீதிபதி வாதிட்டார். மாணவர்களை, அவர்களின் இனத்தை விட அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் தனிப்பட்டவர்களாக கருதுவதன் முக்கியத்துவத்தை, தடைக்க்கு ஆதரவு அளிக்கும் நீதிபதிகள் ஆதரிப்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க | Dress Code: கர்நாடாகவைப் போலவே கேரளாவில் கல்வியில் புகும் ஹிஜாப் பிரச்சனை
சமூகத்தில் இனப் பிரிவினை
தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதியரசர் சோனியா சோட்டோமேயர், சமூகத்தில் இனப் பிரிவினையின் தொடர்ச்சியான யதார்த்தத்தை பெரும்பான்மை நீதிபதிகள் ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டனர் என்று கூறி, கடுமையாக எதிர்த்தார். இனத்தை கவனிக்காமல் இருப்பது உண்மையான சமத்துவத்திற்கு வழிவகுக்காது என்று வாதிட்டார். மேலும், தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வழக்கு & பல்கலைக்கழக சேர்க்கை
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் நார்த் கரோலினா பல்கலைக்கழகம் (UNC) ஆகியவற்றிற்கு எதிராக நியாயமான சேர்க்கைக்கான ஆர்வலர் குழு மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இன உணர்வுள்ள சேர்க்கை கொள்கைகள் சமமாக அல்லது சிறந்த தகுதி பெற்ற ஆசிய அமெரிக்க விண்ணப்பதாரர்களுக்கு பாதகமானதாக இருப்பதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தீர்ப்பின் பாதகங்கள்
விண்ணப்பங்களை மதிப்பிடும் போது, இனவெறி அனுபவங்கள் உட்பட, விண்ணப்பதாரரின் பின்னணியைக் கருத்தில் கொள்ள இந்தத் தீர்ப்பு பல்கலைக்கழகங்களில் மானவர்களை சேர்க்க அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், விண்ணப்பதாரரின் இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலிப்பதை இந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்துகிறது.
கன்சர்வேடிவ் கண்ணோட்டம்
கன்சர்வேடிவ்கள் தீர்ப்பை வரவேற்கின்றனர். கறுப்பின அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் முன்னேற்றம் காரணமாக, தற்போது உறுதியான நடவடிக்கை (affirmative action) நியாயமற்றது என்றும், இனி இது தேவையில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியின் அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் நேர்மை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி இந்த முடிவை வரவேற்றனர்.
ஆசிய அமெரிக்க மாணவர்கள் சேர்க்கை
இது ஆசிய அமெரிக்க மாணவர்களுக்கு எதிரான சார்புகளை இந்தத் தீர்ப்புக் கட்டுப்படுத்தும் என்று, கென்னி சூ போன்ற தீர்ப்பை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். மற்ற இனக்குழுக்களுடன் ஒப்பிடும்போது ஆசிய அமெரிக்கர்கள், பெரும்பாலும் உயர் தரநிலைகளின் காரணமாக, பல்கலைக்கழக சேர்க்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பதாக தீர்ப்பை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.
தீர்ப்பு ஏற்படுத்தும் கவலைகள்
கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பான மைல்கல் ரோ வி வேட் முடிவை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து இது மற்றொரு அதிரடி தீர்ப்பாக இருப்பதாக பலரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். பல்கலைக்கழக சேர்க்கை செயல்முறையின் போது பின்தங்கிய சிறுபான்மையினருக்கு, கூடுதல் பரிசீலனைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களை நிறுத்துவதற்கு இந்த முடிவு வழிவகுக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
மேலும் படிக்க | உலகில் உள்ள தனியார் படைகள்! அரியணையையே கவிழ்க்கும் சக்தி படைத்த ’தனியார் ராணுவங்கள்’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ