காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பவை என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய கவுன்சில் கூட்டத்தில் இந்தியா பதிலடி!!
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பதிலளிக்கும் உரிமையில் அண்டை நாட்டில் சிறுபான்மையினரின் அவல நிலையை எழுப்பியதை இந்தியா கண்டது.
42-வது ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேசி இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காஷ்மீரிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தியா சார்பில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய வெளியுறவுத்துறையின் கிழக்கு பகுதி செயலாளர் விஜய்தாக்கூர் சிங் மற்றும் பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் அஜய் பிசாரியா ஆகியோர் பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது முற்றிலும் இந்திய விகாரம் என்று விஜய்தாக்கூர் சிங் தெரிவித்தார். இதனால் பாலின பாகுபாடு நீக்கப்பட்டு கல்வி உரிமை கிடைக்கும் சூழல் உருவாகி இருப்பதாக கூறினார். காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது அமைதி நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். நேரலையை வர்ணணை செய்வது போன்று இந்தியா மீது பொய்யான புகார்களை கூறும் நாடு, பயங்கரவாதத்தின் மையமாக இருப்பதை உலக நாடுகள் அறிவும் என்று பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் அவர் சாடினார்.
India rejects Pakistan's false narrative on J-K, says terrorism worst form of human rights abuse
Read @ANI story | https://t.co/kP9YvFJc8m pic.twitter.com/gABdX40wvT
— ANI Digital (@ani_digital) September 10, 2019
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, இட்டுக்கட்டி கூறப்பட்டவை. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்பகுதியில் இருந்து வந்துள்ள ஒரு குழு (பாகிஸ்தான்) பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளது. பொய் குற்றச்சாட்டு கூறும் நாட்டில் (பாகிஸ்தான்) பயங்கரவாத தலைவர்கள் பல ஆண்டாக வசிப்பதை அனைவரும் நன்கு தெரியும் என அவர் கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேசி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் என்றார். இதுவரை காஷ்மீரை சர்ச்சைக்கு உரிய நிலம் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில் குரேசி, காஷ்மீரை இந்திய மாநிலம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.