அமைச்சர்கள் ராஜினமா... சிக்கலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் சுகாதார மற்றும் நிதி அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2022, 03:32 PM IST
  • பிரிட்டனின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • புதிய நிதி அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதிய சுகாதார செயலாளராக ஸ்டீவ் பார்க்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்கள் ராஜினமா... சிக்கலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் title=

பிரிட்டனின் நிதி அமைச்சரான ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் செவ்வாயன்று ராஜினாமா செய்தனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அமைச்சர் ஒருவர் மீதான பாலியல் முறைகேடு புகாரை உள்ளடக்கிய சமீபத்திய ஊழலுக்கு மன்னிப்பு கேட்கு வகையில், எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசு பதவியில் நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

மனசாட்சியுடன் பணியை தொடர முடியாது என்றும் அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை என்றும் கூறி சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, நிதியமைச்சர் ரிஷி சுனக்கும் பதவி விலகுவதாக அறிவித்தார். பதவி விலகல் முடிவை அறிவித்த ரிஷி சுனக் கூறுகையில், அரசு "சரியான முறையில், திறமையாக செயல்படும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், நான் பதவி விலகுகிறேன்," என்று தெரிவித்தார்.

இவர்கள் இருவரின் ராஜினாமா, பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.

மேலும் படிக்க | முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள்; எதிர்க்கும் இலங்கை மீனவர்கள்

ரிஷி சுனக், இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2009 ஆம் ஆண்டு, இன்போசிஸ் நிறுவனர் நாராண மூர்த்தியின் மகளான் அக்‌ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். 

இதனை அடுத்து பிரிட்டனின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, புதிய நிதி அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, புதிய சுகாதார செயலாளராக ஸ்டீவ் பார்க்லே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சட்டவிரோதமாக, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற 51 இலங்கையர்கள் கைது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News