துருத்தி அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன், (Turkish president Recep Tayyip Erdogan) தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான துருக்கியில், கடந்த 2014ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வருபவர் எர்டோகன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, துருக்கியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியல்வாதியான இருடோகன், மார்ச் மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ள, நகராட்சி தேர்தல்தான் தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்றும், அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு தான் ஒதுங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன், 2002ம் ஆண்டில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் 31ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்கள்
துருக்கியில் மார்ச் மாதம் 31ஆம் தேதி, மேயர்கள் கவுன்சிலர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்கும், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டு, அடுத்த அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
அரசியல் வாரிசை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய முடிவு
மார்ச் மாத இறுதி தேர்தலில் கிடைக்கும் முடிவுகள், தன்னுடைய அரசியல் வாரிசை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய முடிவை எடுப்பதில், தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது கட்சி 2028 ஆம் ஆண்டு வரை, ஆட்சியில் இருக்கும் என்றும், நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 70 வயதான எர்டோகன் தனது நீதி மற்றும் மேம்பாட்டு (AKP) கட்சி தான் பதவியில் இருந்து விலகிய பின்னரும் ஆட்சியில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்... யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?
நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி
RTE என்றும் அழைக்கப்படும் ரிசெப் தயிப் எர்டோகன், துருக்கி அதிபராக ஆவதற்கு முன் துருக்கியின் பிரதமராகவும் பணியாற்றினார். 2001ம் ஆண்டு நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சியை (Justice and Development Party - AKP) நிறுவினார் எர்டோகன்.
சர்வாதிகாரம் கொண்ட நாடு
துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்று அழைக்கப்பட்டாலும், ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 1923ல் ஜனநாயக நாடாக உருவான துருக்கி, தன் 100வது ஆண்டில் காலடி வைத்த போது, துருக்கி அதிபர் தேர்தலில் ரிசெப் தையிப் எர்டோகன் வெற்றி பெற்றார்.
தனது கடைசி தேர்தல், இதுவாக இருக்கும் என எர்டோகன், அறிவித்துள்ள போதிலும், எர்டோகனின் உறுதிப்பாடு குறித்து, விமர்சகர்கள் பல சந்தேகங்அளை எழுப்பியுள்ளனர். எர்டோகனின் தனது கருத்துக்களில் உறுதியாக இருப்பாரா என்று கேள்வி எழுப்பும் அரசியல் விமர்சகர்கள், அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்றும், அவர் மீண்டும் போட்டியிட வகை செய்யும் விதமாக தேர்தல் சட்டங்களை மாற்றலாம் என்றும் கூறியுள்ளனர்.
துருக்கியை புரட்டி போட்ட பூகம்பம்
துருக்கியில் நடைபெற்ற மே மாத தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி 6 அன்று தெற்கு துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியது. இதில், 44,200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், 164,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து நாசமாயின. 80 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. வரலாற்றில் துருக்கியின் மிக மோசமான மனிதாபிமான பேரழிவாக பதிவாகியது.
மேலும் படிக்க | 5ஆவது திருமணம் அதுவும் 92 வயதில்... யார் இந்த காதல் மன்னன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ