எல் சால்வடோர் என்னும் நாடு பிட்காயினை தங்கள் தேசிய அளவிலான நிதி பரிமாற்றத்துக்கு அங்கீகரித்துள்ளது. அந்த நாட்டில் அமெரிக்க டாலர் பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிட்காயினும் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தபடும்.
பிட்காயின் (Bitcoin) (நாணயக் குறியீடு: BTC; ฿) அல்லது நுண்காசு என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது.இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. பிட்காயின் என்பது தொடரேடு என்று அழைக்கப்படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது.பிட்காயினை வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம், பொருள்கள் வாங்கலாம்,மற்றும் சேமித்து வைக்கலாம். பொது வழக்கில் உள்ள பணம் ஒரு மைய வங்கியால் (Central Bank) கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது.
ஆனால், பிட்காயின் என்ற இந்த கணினிக் காசு எந்த வங்கியாலும் மேற்பார்வை இடப்படுவது இல்லை,கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை.பிட்காயினைக் கண்டு பிடித்தவர் சப்பானிய நாட்டைச் சேர்ந்த சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) என்று கூறப்படுகிறது. எனினும் கண்டுபிடித்தவர் உண்மையில் யார் என்று தெரியவில்லை.அவரால் பிட்காயின் திறந்த மூல மென்பொருளாக 2009-ல் வெளியிடப்பட்டது
பிட்காயினின் நிலையற்றத் தன்மையாலும், பாதுகாப்பற்றத் தன்மையாலும் பல நாடுகளும் அதை பரிமாற்ற நாணயமாக அங்கீகரிக்க சுணக்கம் காட்டி வருகின்றன.மேலும், பிட்காயின் என்பது ஒரு வெறும் பொருளாதாரக் குமிழ் (economic bubble) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது.இருப்பினும், பிட்காயினில் பலர் முதலீடு செய்துள்ளனர் என்பதும் மறுக்கப்படாத உண்மை
இப்படியான சூழலில் தான் எல் சால்வடோர் அரசு, பிட்காயினை அங்கீகரித்துள்ளது. எல் சால்வடோரிலும் கூட பிட்காயினை அங்கீகரித்து பணப் பரிமாற்றத்துக்கு ஏற்றபடி நடைமுறைக்கு கொண்டு வருவதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் நிலவி வந்தன. தற்போது அனைத்து சிக்கல்களும் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அதனாலேயே பிட்காயின் பரிமாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ALOS READ தாலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி காயம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR