அப்பா, அம்மா மற்றும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் சுருங்கிபோன குடும்ப சூழலைதான் நாம் இன்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கூட்டு குடும்பம் என்று ஒன்று இருந்தது என கதை சொல்லும் நிலையும் உருவாகி விட்டது. நம் தாத்தா, பாட்டி, பாட்டன் என பரம்பரை கடந்து வந்த பாதை இதுவல்ல என்பதுதான் உண்மை.
குறைந்தது 10 குழந்தைகளை பெற்றெடுத்து உறவுகளை பலப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அப்படி தங்களுக்கென ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதையே கனவாகவும் லட்சியமாகவும் கொண்ட தம்பதிகள்தான் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே, பெரெஸ் எடியோஃபினா டெல் ரொசாரியோ கார்சியா ஆகியோர்.
60 ஆண்டுகள் தங்கள் காதல் வாழ்கையில் அவர்கள் இன்றெடுத்த சொத்து ஆறு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள், 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 எள்ளுப் பேரக்குழந்தைகள். இவர்களை வைத்து மாபெரும் குடும்பத்தை கட்டியமைத்துள்ள ஜுவான் விசென்டே பெரெஸ்க்கு நாளையுடன் 113 வயதாகிறது.
உலகின் மிக வயதான நபர் என கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவர், இன்றும் நல்ல உடல் நலத்தோடும் நினைவாற்றலோடும் உள்ளார் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவருடைய பிள்ளைகள் அவர்களின் குழந்தைகள், கொள்ளு மற்றும் எளுப்பேரக்குழந்தைகள் என அனைவரின் பெயரும் அவருக்கு துல்லியமான தெரிகிறது என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் நாளை தனது குடும்பத்தினருடன் ஜுவான் விசென்டே 113ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
மேலும் படிக்க | உப்பு நிறந்த கடலில் சர்க்கரை குவியல்கள்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR