Vanangaan Vs Game Changer : கேம் சேஞ்சர் மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருப்பதை தொடர்ந்து, இவை இரண்டில் எதை முதலில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
2025 தொடங்கி சில நாட்களுக்குள்ளாகவே, தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பல தற்போது வெளிவர தொடங்கி இருக்கின்றன. அதில், ரசிகர்களை 2 ஆண்டுகளாக வெயிட்டிங்கிலேயே வெறியேற்றிய வணங்கான் படமும், 4 ஆண்டுகளுக்கும் மேல் உருவாக்கப்பட்டு எடுக்கப்பட்ட கேம் சேஞ்சர் படமும் அடக்கம். இந்த இரு படங்களுமே தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்கள் உருவாக்கிய படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேம் சேஞ்சர் திரைப்படம்:
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தில், ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜாேடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழிலும் டப்பிங் செய்திருக்கின்றனர். தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்ற ஷங்கர், கடைசியாக இயக்கிய இந்தியன் 2 படத்தில் பெரிய அளவில் சறுக்கினார். இதையடுத்து, அவரது கேம் சேஞ்சர் படம், இவரது கேமை மாற்றுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
கேம் சேஞ்சர் படம், நேர்மையான ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் வாழ்க்கையும், அவரை சுற்றி இருக்கும் லஞ்சவாதிகளான அரசியல்வாதிகள் எப்படி அவரை வீழ்த்த முயற்சி செய்கின்றனர் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.
வணங்கான்:
பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ சூர்யா. ஆனால், சில காரணங்களுக்காக இந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார். இதையடுத்து கமிட் ஆன ஹீரோ, அருண் விஜய்.
பாலா படம் என்றாலே அது மனதை நொருக்கும் வகையிலான கதையாகத்தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதுவும் அது போன்ற ஒரு படம்தான் என கூறப்படுகிறது. இந்த படம் தன்னை சுற்றி இருக்கும் அநியாயங்களை தடுக்க நினைக்கும் கோட்டி என்கிற நாயகனின் கதையை பேசும் கதையாக இருக்கிறது.
வணங்கான் vs கேம் சேஞ்சர்:
வணங்கான்-கேம் சேஞ்சர் இந்த இரு படங்களில், ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்த படம் எது என்று கேட்டால், இவை இரண்டிற்குமே பெரிதாக இல்லை என்றுதான் கூற வேண்டும். கேம் சேஞ்சர் படம், தமிழில் உருவாகவில்லை என்பதால் ரசிகர்களுக்கு அதன் மீது கவனம் பெரிதாக திரும்பவில்லை. அது மட்டுமன்றி, இந்தியன் 2 படத்தால் பலர் ஏமாற்றமடைந்ததால் அவர்களும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கவில்லை.
அதே போல, பாலா படத்தை பார்ப்பதற்கென்ற தனியான ரசிகர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு கூட, வணங்கான் படத்தை பார்க்க வேண்டுமென்ற பெரிய ஆவல் எழவில்லை. காரணம், இந்த படத்தின் டிரைலர் அல்லது இது குறித்த விஷயங்கள் எதுவும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.
இரண்டில் எது நல்லாயிருக்கு?
கேம் சேஞ்சர் திரைப்படத்தை, தெலுங்கு ரசிகர்களுக்குத்தான் பெரிதாக பிடித்திருக்கிறது. காரணம், அந்த படத்தின் ஹீரோ ராம்சரண் என்பதுதான். ஆனால், அவர்களில் சிலர் கூட படம் சுமார்தான் என கூறி வருகின்றனர். ஷங்கர், ஓட்டிய ரீலையே மீண்டும் ஓட்டியிருப்பதாக சிலர் கூறியிருக்கின்றனர்.
வணங்கான் படத்தை பொறுத்தவரை, படத்தின் தொய்வான திரைக்கதை போர் அடிக்க வைப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இருப்பினும் படம் ஒரு சிலருக்கு பிடித்திருக்கிறது. அருண் விஜய்யை பாலா சரியாக உபயோகித்திருப்பதாகவும், அவருக்கு படத்தில் ஸ்கோர் செய்ய பல காட்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
மேலும் படிக்க | வணங்கான் படம் வெளியாவதில் சிக்கல்!! என்ன பிரச்சனை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ