Thailand: முடியாட்சியில் சீர்திருத்தங்களை கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரை நீக்கவும் கோரிக்கை...

தாய்லாந்து பிரதமர் Prayut Chan-O-Chaவை நீக்கக் கோரி போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினார்கள். நாட்டின் முடியாட்சி அமைப்பில் சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2020, 09:03 PM IST
Thailand: முடியாட்சியில் சீர்திருத்தங்களை கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரை நீக்கவும் கோரிக்கை...  title=

பாங்காக்கின் தம்மசாத் பல்கலைக்கழக (Thammasat University) வளாகத்திற்கு வெளியே சுமார் 5000 பேர் கூடி தீவிர ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்...  தாய்லாந்து பிரதமர் Prayut Chan-O-Chaவை நீக்கக் கோரி போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினார்கள். நாட்டின் முடியாட்சி அமைப்பில் சீர்திருத்தங்கள் தேவை என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே குறைந்தது 5,000 பேர் கூடியிருந்ததாக பொலிசார் கூறியதால், பாங்காக்கின் தம்மசாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றதாகத் தெரிகிறது.   

முன்னாள் பிரதமர் தாக்சின் ஷினாவத்ராவுக்கு (Thaksin Shinawatra) எதிராக 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஆண்டு நிறைவுக்கு மத்தியில் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

"சர்வாதிகாரம் ஒழிக!!!  ஜனநாயகம் வாழ்க!" என்றும் "பிரயுத் வெளியேறு!" என்றும் முழக்கங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடியாட்சியை மாற்றி ஜனநாயகத்தை கொண்டுவரக் கோரும் இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையிலேயே நடைபெற்றன.

முடியாட்சியை சீர்திருத்துமாறு, அரச பரம்பரைக்கு எதிரான போராட்டத்திற்கு மாணவர்கள்  அழைப்பு விடுத்ததால் குறைந்தது 10,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீதிகளில் ரோந்து சென்றதை பார்க்க முடிந்தது. தாய்லாந்தின் சக்திவாய்ந்த மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் (Maha Vajiralongkorn) வானளாவிய அதிகாரங்களையும், அசாதாரண அரசியல் சக்தியையும் பயன்படுத்துவதாக எதிர்ப்பாளர்கள் குறைகூறுகின்றனர். அதோடு, அரசு இயந்திரத்தையும், ராணுவத்தையும் பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களை அடக்க முயல்வதாகவும் போராட்டக்காரர்கள்   குற்றம் சாட்டுகின்றனர்.  

royal defamation laws எனப்படும் அரசக் குடும்பத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது பயன்படுத்தப்படும் ராஜ அவதூறு சட்டங்களை ஒழிப்பதோடு, அரசரின் நிதி விவகாரங்களுக்கு அதிக பொறுப்பேற்பு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் போராட்டங்கள் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News