ஆப்கானில் ஆட்சி அமைக்கும் வேலையை தொடங்கிய தலிபான்; தப்பியோடும் மக்கள்

ஆப்கானிஸ்தானை முழுமையாக கைபற்றிய பிறகு, தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைக்கும் பணியை தொடக்கியுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 22, 2021, 09:43 PM IST
  • ஆகஸ்ட் 15 அன்று தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றினர்
  • நகர முழுவதும் தாலிபான் பயங்கரவாதிகள் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
  • காபூல் விமான நிலையம் அமெரிக்கா வசம் உள்ளது.
ஆப்கானில் ஆட்சி அமைக்கும் வேலையை தொடங்கிய தலிபான்; தப்பியோடும் மக்கள் title=

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானை (Afghanistan) முழுமையாக கைபற்றிய பிறகு, தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைக்கும் பணியை தொடக்கியுள்ளனர். தாலிபான்கள் முல்லா ஷிரினை காபூலின் ஆளுநராக நியமித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்போது முல்லா ஷிரின் காபூலின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்வார்

ஆகஸ்ட் 15 அன்று நாடு கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 15 அன்று, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானின் (Afghanistan) பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றினார்கள். தலிபான்கள் கைப்பற்றியவுடன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச்சென்றார். அவருடன் பல ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளும் இருந்தனர்.

தாலிபான் பயங்கரவாதிகளின் ரோந்து பணி

ஆப்கானை கைப்பற்றியதிலிருந்து, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளிலும் தலிபான் (Taliban) பயங்கரவாதிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகங்களில் இல்லை. அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும், காவல்துறையினரும் வீரர்களும் சரணடைந்துள்ளனர் அல்லது நகரங்களை விட்டு வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர். ஆப்கானிஸ்தானில் வங்கிகளுக்கு வெளியே மக்கள் கூட்டம் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொப்டர்ந்து அதிகரித்து வருகிறது.

ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்

காபூல் விமான நிலையம் அமெரிக்க கட்டுபாட்டில் உள்ளது

தற்போது, ​​ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் (Kabul) விமான நிலையம் இயங்கி வரும் நிலையில், அங்கு, 5800 அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், விமான நிலைய போகுவரத்து தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறுவதாக அமெரிக்கா உறுதியளித்ததாக தாலிபான் துணை தளபதி அனஸ் ஹக்கானி கூறியுள்ளார். 

ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்

விமான நிலையத்தில் குவியும் மக்கள்

தாலிபான் ஆட்சிக்கு அஞ்சிய நிலையில் தலைநகர் காபூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 2 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கடந்த ஒரு வாரமாக சுமார் 20 ஆயிரம் பேர் கூடியுள்ளனர். எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என விமான நிலையத்திற்குள் நுழைய முஅய்ற்சி செய்கிறார்கள். இவர்களில் பலருக்கு விசா மற்றும் பாஸ்போர்ட் கூட இல்லை. எனினும், அவர்கள் எப்படியாவது தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தப்பிக்க விரும்புகிறார்கள்.

ALSO READ | "இந்தியா சொர்க்க பூமி”: இந்தியாவிற்கு அகதியாக வந்துள்ள ஆப்கான் பெண்மணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News