Strike: எந்த நாட்டில் உணவுப்பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது?

மாவு அரைக்கும் தொழில் தொடர்பான மூன்று வரிகளை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 30 முதல் மாவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மாவு ஆலைகள் சங்கம் அறிவித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 24, 2021, 06:50 AM IST
  • எந்த நாட்டில் உணவுப்பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது?
  • நாட்டில் மாவு நெருக்கடி அதிகரிக்கும்
  • மாவு அரைக்கும் தொழில் தொடர்பான மூன்று வரிகளை உயர்த்துவதற்கு எதிராக போராட்டம்
Strike: எந்த நாட்டில் உணவுப்பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது?  title=

உணவுப்பொருட்கள் விநியோகத்தை நிறுத்தினால் நாட்டின் நிலைமை என்னவாகும்? மக்கள் எவ்வாறு அவதிப்படுவார்கள்? தொழில் நசித்துப் போகும் என்றாலும், ஏன் விநியோகம் நிறுத்தப்பட்டது?

இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவது பாகிஸ்தானில் தான். அந்நாட்டில் மாவு அரைக்கும் தொழில் தொடர்பான மூன்று வரிகளை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 30 முதல் மாவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மாவு ஆலைகள் சங்கம் (Pakistan Flour Mills Association) அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாவு ஆலைகளும் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மாவு நெருக்கடி அதிகரிக்கும். 

"நாங்கள் நாளை முதல் மாவு வழங்குவதை நிறுத்திவிடுவோம், ஜூன் 30 முதல் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திவிடுவோம். அரசாங்கத்தின் அக்கறையற்ற அணுகுமுறை காரணமாக இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது" என்று மாவு ஆலைகள் சங்கத்தின் சிந்து மண்டலத் தலைவர் சவுத்ரி முஹம்மது யூசுப் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.

Also Read | பாகிஸ்தானில் கோதுமை மாவின் விலை உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்..!
 
மாவு ஆலைகளின் வருடாந்திர விற்பனையில் ஒரு சதவீத தள்ளுபடியை ரத்து செய்வதாக பாகிஸ்தான் மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய 2020-21 மத்திய பட்ஜெட்டில் (Budget 2020-21) அறிவித்த பின் இந்த வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிடு (bran) மீதான விற்பனை வரியை 10 சதவீதம், மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான விற்பனை வரி 7 சதவீதம் அதிகரிப்பதாக அரசு அறிவித்தது.

மேலும், விற்றுமுதல் வரியின் (turnover tax) அதிகரிப்பு 20 கிலோ பை ஒன்றுக்கு 30 ரூபாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிடு மீதான விற்பனை வரியும் இணைந்து 20 கிலோ மாவு பை ஒன்றின் விலை 67 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக PFMA தலைவர் அசிம் ராசா கடந்த வாரம், பாகிஸ்தான் நிதியமைச்சர் சவுகத் தரினுக்கு (Minister for Finance Shaukat Tarin) எழுதிய கடிதத்தில், வரி உயர்வு மத்திய அரசின் பிழை என்று விவரித்தார். மேலும், தற்போது இருக்கும் வருவாய் மற்றும் வரி விகிதத்தை பராமரிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

Also Read | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

மாவு தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான தற்போதைய விற்பனை வரி விகிதம் 10 சதவீதமாக இருக்கிறது. இது அடுத்த நிதியாண்டில் 17 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அசிம் ராஜா தெரிவித்தார். வரிகளின் அதிகரிப்பு இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் 

தற்போது, ஆலைகள் அமைப்பதற்கான மொத்த செலவில் 65 சதவீதம், நவீன இயந்திரங்களை வாங்குதல் மற்றும் இறக்குமதி செய்வதன் அடிப்படையில் அமைகிறது. வரி அதிகரிப்பதால், மில்லியன் கணக்கான நட்டத்தை தொழில் நிறுவனங்கள் சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 30 மில்லியன் டன் மாவு பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் 3 முதல் 4 மில்லியன் டன் மாவுகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும்போது மாவு ஆலைகளின் வேலை நிறுத்தம் நாட்டில் உணவு பற்றாக்குறையை அதிகரிக்கும்.

2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வேலை உருவாக்கம் மற்றும் வருவாய் உருவாக்கம் இல்லை என்று பாகிஸ்தான் மத்திய அரசு மீது அனைவரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.   

Also Read | ஏலியனை காதலிக்கும் பெண், அடுத்த சந்திப்புக்காக காத்திருக்கிறார்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News