ஆன்லைனில் iphone13 pro max ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆன்லைனில்  iphone13 pro max ஆர்டர் செய்தவருக்கு போனுக்கு பதிலாக டாய்லெட் பேப்பரில் சுற்றப்பட்ட கேட்பரி ஓரியோ சாக்லேட் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2021, 10:24 PM IST
ஆன்லைனில் iphone13 pro max ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! title=

இங்கிலாந்து:  ஆன்லைனில்  iphone13 pro max ஆர்டர் செய்தவருக்கு போனுக்கு பதிலாக டாய்லெட் பேப்பரில் சுற்றப்பட்ட கேட்பரி ஓரியோ சாக்லேட் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது நேரடியாக கடைகளில் சென்று பொருட்களை வாங்குவதை விட பெரும்பாலானோர் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க தொடங்கிவிட்டனர்.  இவ்வாறு ஆன்லைன் மூலம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பொருட்களை வாங்குவது பலருக்கும் எளிதாக இருப்பதுடன், நேர விரயம் ஆவதில்லை.  சிலருக்கு ஆர்டர் செய்த பொருட்கள் சரியாக வந்துவிடும், சிலருக்கோ அப்படி வருவதில்லை, அவர்கள் எதிர்பார்த்தது ஒன்றாக இருக்கும், வந்து சேர்ந்தது மற்றொன்றாக இருக்கும்.

ALSO READ | ஊழல் புகாரில் சிக்கிய பிரதமர்..! பணியிடை நீக்கம் செய்த அதிபர்

அந்த வகையில் இது போல இங்கிலாந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் கரோல் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒரு மொபைலை வாங்க முடிவு செய்து, ஆன்லைனில்  iphone13 pro max மொபைலை சுமார் ரூ.1 லட்சத்திற்கு ஆர்டர் செய்தார்.  இவர் ஆர்டர் செய்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், மொபைல் வரவில்லை.

அதனையடுத்து அவர் டெலிவரி தாமதமாவதாக கூறி அந்த குறிப்பிட்ட ஆன்லைன் தளத்திற்கு தொடர்புகொண்டு கம்ப்ளெயிண்ட் செய்தார்.  அதன் பின்னர் ஒருவழியாக டானியல் ஆர்டர் செய்திருந்த பார்சல் வீட்டிற்கு வந்தது.  மொபைலை பார்க்க ஆர்வத்துடன் பார்சலை திறந்து பார்த்தபோது, அதனுள் அவர் ஆர்டர் செய்திருந்த மொபைலுக்கு பதிலாக, டாய்லெட் பேப்பர்களில் அழகாக சுற்றப்பட்டு இரண்டு கேட்பரி ஓரியோ சாக்லேட் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

iphone

பின்னர் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதையடுத்து, DHL கிடங்கின் மேலாளரிடம் புகார் அளித்தார்.  ஆனால் அவரின் பதில் திருப்திகரமாகவில்லை என்றும், கிறிஸ்துமஸ் பரிசு இப்படி அமைந்துவிட்டது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிர்வாகம் அவர் ஆர்டர் செய்த மொபைலையே அவருக்கு வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.

ALSO READ | உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதியை உருவாக்கியுள்ளது சீனா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News