வேலை, கல்வி, சுற்றுலா என இந்தியர்கள் பல வித காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில், 2022 ஆம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 43% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்திய நாட்டினரின் ஷெங்கன் விசா விண்ணப்பங்களும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன என அறிக்கை கூறுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான ஷெங்கன் விசா விண்ணப்பங்கள் மொத்தம் 966,687 தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனப் பிரஜைகள் இந்த ஆண்டிற்கான பெரும்பாலான விசா விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 1.1 மில்லியன் சீனர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் ஷெங்கன் விசாக்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவை சீன நாட்டினரால் செய்யப்பட்டன. அதே நேரத்தில் துருக்கியர்களும் இந்தியர்களும் அதற்கு அடுத்தபடியாக உள்ளனர் என்று ஷெங்கன் விசா பிரிவு கூறுகிறது.
மேலும், 2023 இல் தாக்கல் செய்யப்பட்ட ஷெங்கன் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10.3 மில்லியனைத் தாண்டியுள்ளது. இது 2022 இல் இருந்து 37 சதவீதம் அதிகமாகும். 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 8.49 மில்லியன் விசாக்கள் வழங்கப்பட்டன, தாக்கல் செய்யப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 82.3 சதவீதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 2022 ஆம் ஆண்டில், விசா விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட விகிதம் 78.4 சதவீதமாக இருந்தது என்று ஷெங்கன் விசா துறை வெளியிட்டுள்ள தகவல் கூறுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பல வருடங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வரும், நிலையில், ஷெங்கன் என்று அழைக்கப்படும் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாகச் செல்ல வழிவகை செய்யும் மல்டிபிள் என்ட்ரி அனுமதியுடன் கூடிய ஷெங்கன் விசாவிற்கு இந்தியர்கள் (Schengen Visa For Indians) விண்ணப்பிக்கலாம் என சென்ற மாதம் ஐரோப்பா கூறியது. புதிய விதிகளின்படி, இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் நீண்ட கால, பல நுழைவு ஷெங்கன் விசாக்களை பெறலாம்.
மேலும் படிக்க | துபாய் அன்லாக்ட் வெளியிட்ட பாகிஸ்தானின் பணக்கார முகம்! வயிறெரியும் நாட்டு மக்கள்!
ஷெங்கன் விசா முதலில் 2 ஆண்டுகளுக்கானதாக இருக்கும். அதன் பிறகு, அதை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். எனினும், அதற்கு உங்கள் பாஸ்போர்ட் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாக உள்ளதாக இருக்க வேண்டும். புதிய விசா வழங்கப்பட்டவுடன், பயணிகள் 90 நாட்கள் வரை ஷெங்கன் பகுதிக்குள் சுதந்திரமாக செல்ல முடியும். இருப்பினும், ஒரு பயணத்திற்கும், அடுத்த பயணத்திற்கு, ஆன இடைவெளி 180 நாட்கள் இருக்க வேண்டும். ஆனால் இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் விசா பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
ஷெங்கன் பகுதி ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 உறுப்பு நாடுகளுடன் 29 ஐரோப்பிய நாடுகளைக் கொண்டுள்ளது. அதாவது ஒரே ஒரு விசா மூலம் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியும். ஷெங்கன் பகுதியில் பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, எஸ்டோனியா, கிரீஸ், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், ஹங்கேரி, மால்டா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | Thailand: அதிகரிக்கும் கடல் நீர்மட்டம், பாங்காங்கின் தலைநகர் அந்தஸ்தை பறிக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ