Kim Jong Un Gift Controversy: "ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரான விளாடிமிர் விளாடிமிரோவிச் புடின், வட கொரிய அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை பரிசளித்தார்" என்று பியோங்யாங்கின் அதிகாரபூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (Korean Central News Agency) தெரிவித்துள்ளது. ஐநாவின் தடையை மீறி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் பரிசளித்திருப்பது ரஷ்யாவின் எண்ணத்தை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சில காலமாக, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளும் பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பிற துறைகளில் பரஸ்பர உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வருகின்றன. இந்த அடிப்ப்டையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய தயாரிப்பான காரைப் பரிசாக வழங்கினார் என்று பியோங்யாங்கின் அரசு ஊடகம் இன்று (2024 பிப்ரவரி 20 செவ்வாய்கிழமை) தெரிவித்தது.
கிம் ஜாங் உன்னின் அணுசக்தி மற்றும் பிற ஆயுதத் திட்டங்கள் தொடர்பாக வடகொரியா நாட்டிற்குக் ஐ.நா.வின் பல தடைகளை விதித்துள்ளது. தற்போது, கார் ஒன்றை பரிசளித்த ரஷ்யா ஐநாவின் தடைகளை மீறியுள்ளது. வடகொரியாவின் ஒப்புதலுடன் தான் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆடம்பரப் பொருட்கள் அல்லது வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐநாவின் தடையை மீறிய ரஷ்யா மீது ஐநா நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விகளும் எழுகிறது.
மேலும் படிக்க | ராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா பாகிஸ்தான்... நீடிக்கும் குழப்பம்..!!
கிம் ஜாங் உன்னின் கார் மோகம்
ஆடம்பரமான வாகனங்கள் மீது கிம் ஜாங் உன் காதல் கொண்டவர். லெக்ஸஸ் எஸ்யூவிகள் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் மாடல்களை என பல சொகுசு கார்களை அவர் பயன்படுத்துகிறார். 2021ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையின்படி, வட கொரியாவிற்கு $1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு வாகனங்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சொகுசு வாகனங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சீனாவின் நிங்போவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் மாடல்களும் அடங்கும்.
சொகுசு வாகனம் என்று வகைப்படுத்தப்பட்ட கார், கிம்முக்கு பரிசாக வழங்கப்பட்டது என்று கூறும் தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், புடினின் பரிசு, ஐநா தடைகளை மீறியது தான் என்று தெரிவித்துள்ளது.
ஐ.நா. தடைகளை மீறியதை பகிரங்கமாக வெளிப்படுத்தும் வட கொரியாவின் போக்கை கண்டிப்பதாக, தென் கொரியாவின் அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, தனது பொறுப்பை உணர்ந்து, சர்வதேச விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தென்கொரியா கருதுகிறது. கடந்த ஆண்டு கிம், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, புடின் தனது ’ஆரஸ் செனட் லிமோசின்’ ஆடம்பர காரின் பின் இருக்கையில் அவரை அமர வைத்தார்.
வடகொரியாவில் இருந்து சிறப்பு ரயிலில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுமார் 1,180 கி.மீ தொலைவு தூரம் இருக்கிறது. ரயிலில் பயணம் செய்து ரஷ்யா சென்றார். உக்ரைனுடனான போரில் ரஷ்யா மும்முரமாக இருக்கும் நிலையில், அவர், வடகொரியாவுடன் நட்பு பாராட்டுவது சர்வதேச நாடுகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | ரஷ்யாவின் கொடூரமான சிறை கூடங்கள்... தினமும் 16 மணிநேர சித்திரவதை..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ