தாய்லாந்திற்கு கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்க ரஷ்யா முடிவு!

தாய்லாந்திற்கு கோதுமை மற்றும் இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க ரஷ்யா தயாராக உள்ளது என்று ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாண்டுவோவ் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2018, 04:36 PM IST
தாய்லாந்திற்கு கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்க ரஷ்யா முடிவு! title=

மாஸ்கோ: தாய்லாந்திற்கு கோதுமை மற்றும் இறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க ரஷ்யா தயாராக உள்ளது என்று ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ் மாண்டுவோவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ரஷ்யா-தாய்லாந்து அரசாங்கக் கமிஷனிடன் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து மாண்டுவோவ் தெரிவிக்கையில்... "பரஸ்பர வியாபார வருவாயை அதிகரிப்பதற்காக வேளாண் துறையில் ஒரு பெரிய திறனை நாங்கள் எதிர்பார்கிறோம். அந்தவகையில் நமது பங்கிற்கு, ரஷ்யாவின் உற்பத்தி, குறிப்பாக கோதுமை மற்றும் இறைச்சி உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு தயாராக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இருநாட்டுக்கு இடையே வர்தக பணிகளுக்கு தேவைப்படும் வகையில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்குமவும் ரஷ்யா அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து போக்குவரத்து துறையின் புதிய ரயில் பாதைகளின் கட்டுமானப் பணிகளில் பங்கெடுக்க ரஷ்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன எனவும், தாய்லாந்த் அரசாங்க வேலைத்திட்டத்தின் கட்டமைப்பிற்கு உள்நாட்டிற்கான ரயில் பாதைகளை வளர்ப்பதில் உருட்டல் பங்குகளை விநியோகிப்பதுடன், அண்டை நாடுகளுடன் போக்குவரத்து நடைகளை நிறுவுவதற்கான வாய்ப்புக்களை வழங்குவும் ரஷ்யா தயாராக உள்ளது எனவும் மாண்டுவோவ் குறிப்பிட்டார்.

மாண்டுவோவ் கருத்துப்படி, ரஷியன் நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், மருத்துவம் மற்றும் உயிர் தொழில்நுட்பங்கள் துறையில், தொழில்துறை ஒத்துழைப்பு திட்டங்களில் பங்கேற்க தயாராக உள்ளன. "பிரதான நகரங்களில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேலாண்மை உள்ளிட்ட, கணினி பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் நகர தொழில்நுட்பங்களில், தாய்லாந்தில் உள்ள ரஷ்ய விரிவான தொழில்நுட்ப தீர்வுகளை ஒரு முக்கிய பகுதியாக பயன்படுத்தலாம்" எனவும் மாண்டுவோவ் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர், இந்த தீர்மானங்கள் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கும் பரிந்துரைக்கப்படலாம் எனவும் அவர் மாண்டுவோவ் குறிப்பிட்டுள்ளார்.

Trending News