பூமிப்பந்தின் முதல் முனையில் அமைந்துள்ள நியூசிலாந்து, பகல் மற்றும் இரவை முதலாவதாக எதிர்கொள்ளும் நாடாக உள்ளது. அதனால், எப்போதும் புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடாகவும் நியூசிலாந்து இருக்கிறது. அந்தவகையில், 2022 ஆம் ஆண்டை முதல் நாடாக அந்த நாடு வரவேற்றது.
புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் வானுயர கட்டிடங்களில் கண்கவர் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. தலைநகர் ஆக்லாந்தில் கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு புத்தாண்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது.
ALSO READ | Bank Holidays in January: புத்தாண்டின் முதல் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
லேசர் விளக்குகள் ஒளிரூட்டப்பட்டதால், ஆக்லாந்து நகரமே வண்ணமயமாக காட்சியளித்தது. இதனையடுத்து, அந்நாட்டு மக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை மனதார பறிமாறிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். சமூகவலைதளங்கள் முழுவதும் புத்தாண்டின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் புகைப்படங்களும், கண்கவர் லேசர் விளக்குகளின் அழகான புகைப்படங்களும் நிறைந்தன.
இதனையடுத்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு வரவேற்கப்பட்டது. சிட்னியில் வான வேடிக்கைகள் தெறிக்க, 2022 -ஐ அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சிட்னி மட்டுமல்லாது அந்நாட்டின் முக்கிய நகரங்களிலும் வான வேடிக்களைகள் களைகட்டின. முக்கிய கட்டடங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க மேம்பாலங்கள் அனைத்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
உலகில் 2022 பிறந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாடுகள் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ளனர். இந்தியாவிலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ளது. ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு இடையே மக்கள் 2022-ஐ வரவேற்க ஆயத்தமாக உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR