பெய்ஜிங்: COVID-19 தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள தெற்கு சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரு நகரத்தின் ஒரு பகுதியில் லாக்டவுன் அமல்படுத்தப்ப்பட்டுள்ளது
சீனாவின் (China) குவாங்டாங்கின் சுகாதார ஆணையம் சனிக்கிழமையன்று (ஜூன் 19) மொத்தம் ஆறு புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகளை பதிவுசெய்தது, இதில் ஷென்ஜென் நகரிலிருந்து இரண்டு மற்றும் ஃபோஷன் மற்றும் டோங்குவானில் தலா ஒரு தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று தென் சீன மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சீன விமான நிலையத்தில் பணிபுரியும் 21 வயது பணியாளர் ஆவார். விமான நிலைய உணவகத்தில் பணியாற்றும் இவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அவருடன் தொடர்பில் வந்த பலர் அடையாளம் காணப்பட்டு சுமார் 110 பேர் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தொற்று (Corona Virus) பாதிப்பின் விளைவாக 460 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனுடன், விமான நிலையத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து ஷென்ஜென் (Shenzhen) மாகாணத்தில் மொத்தம் 430 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான வைரஸ் திரையிடல்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வைரஸ் தொற்று பரவல் அதிகமுள்ள நகரங்களில் சுமார் 20 லட்சம் மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ALSO READ | கொரோனா தொற்றால் மனதளவில் அதிக பாதிப்பு 'இந்த' வயதினருக்கு தான்: ஆய்வு
கூட்டங்கள் கூடிவருவதைத் தடுக்க போக்குவரத்து மையங்களில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, மேலும் பயணிகள் பொது போக்குவரத்தில் ஏறுவதற்கு முன்பு, தொற்று ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்தும், green health code கொடுக்க வேண்டும்.
இதற்கிடையில், ஃபோஷன் மாகாணத்தில், கடந்த 13 நாட்களாக தொற்று ஏதும் பதிவாகாத, தற்போது 83 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Chennai: Apollo மருத்துவமனையில் கிடைக்கும் Sputnik V தடுப்பூசிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR