Israel: புதிய பிரதமரானார் நப்தாலி பென்னட்; ஆட்சியை இழந்தார் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றார். பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 14, 2021, 01:12 PM IST
  • பெஞ்சமின் நெதன்யாகு 2009 முதல் இஸ்ரேலின் பிரதமராக இருந்தார்.
  • இஸ்ரேலில் இந்த 8 கட்சி கூட்டணி அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
  • மே 23 அன்று நடந்த தேர்தலில் நெதன்யாகு தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
Israel: புதிய பிரதமரானார் நப்தாலி பென்னட்; ஆட்சியை இழந்தார் பெஞ்சமின் நெதன்யாகு title=

டெல் அவிவ்: இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றார். பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 60 எம்.பி.க்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், 59 எம்.பி.க்கள் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், 12 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடித்த பெஞ்சமின் நெதன்யாகுவின்  (Benjamin Netanyahu) பதவிக்காலம் முடிவடைந்தது.

புதிய 8 கட்சி கூட்டணி  அரசு

இஸ்ரேலில் இந்த 8 கட்சி அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு வலதுசாரி யமினா கட்சியின் தலைவர் நாப்தாலி பென்னட்  (Naftali Bennett)  (49) தலைமை தாங்குகிறார். புதிய அரசாங்கத்தில் 27 அமைச்சர்கள் உள்ளனர், அவர்களில் ஏழு பெண்கள். வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகள் புதிய அரசு அமைக்க ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. கூட்டணியில் வலதுசாரி, இடது, மையவாதியுடன், அரபு சமூகத்தை சேர்ந்த ஒரு கட்சியும் உள்ளது.

முன்னதாக, 71 வயதான நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் பென்னட்டின் உரையைத் தடுக்க முயன்றனர்.  சட்டமன்ற உறுப்பினர்களின் சலசலப்புக்கு மத்தியில், மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுவதாக பென்னட் கூறினார். இந்த முக்கியமான காலகட்டத்தில் நாங்கள் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று பென்னட் கூறினார். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையிலிருந்து வெளியேற தேர்தல்கள் மிக முக்கியமானவை என்று அவர் கூறினார்.

ALSO READ | இஸ்ரேலில் முடிவுக்கு வருகிறதா நெதன்யாகுவின் சகாப்தம்; கட்டம் கட்டும் எதிர்க்கட்சிகள்

பெஞ்சமின் நெதன்யாகு 2009 முதல் இஸ்ரேலின் பிரதமராக இருந்தார். நாட்டில்  மிக நீண்ட காலமாக ஆட்சியில் இருந்துள்ளார். 2019 முதல், அவரது மீது குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, மே 23 அன்று நடந்த தேர்தலில் அவர் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இருப்பினும், அவர் தனது தோல்வி சதி  தான் காரணம் என்று கூறினார். 

இஸ்ரேலில் (Israel)  இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு முறை தேர்தல்கள் நடைபெற்ற போதிலும் தெளிவான பெரும்பான்மை முடிவுகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) பதவியிலிருந்து நீக்க, எதிர்கட்சிகள் கை கோர்த்து வெற்றி கண்டுள்ளன.

ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News