வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் ரெடி! வைரலாகும் ஜப்பானின் புதிய டெக்னாலஜி

5 அடி வெள்ள நீரிலும் மிதக்கும் வகையிலான வீடு ஒன்றை ஜப்பான் நிறுவனம் வடிவமைத்து சாதித்துள்ளது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 30, 2022, 04:44 PM IST
  • பலர் வீடுகளை இழந்து, வீட்டிலுள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்று பரிதாப நிலைக்கு செல்கின்றனர்.
  • மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க இதுவரை எந்த ஒரு உருப்படியான கண்டுப்பிடிப்பும் கண்டறியப்படாமல் இருந்தது.
வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் ரெடி! வைரலாகும் ஜப்பானின் புதிய டெக்னாலஜி title=

கிழக்கில் கடல் சூழ அமைத்துள்ள ஜப்பானில் வருடா வருடம் வெள்ளம், சுனாமி, நில நடுக்கம், கடல் கொந்தளிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழ்வதும் அதிலிருந்து மக்கள் விரைந்து தேறுவதுமே வழக்கமாக அமைந்துவிட்டது.

சொல்லப்போனால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பினும் அங்கு மக்களின் வாழ்வாதாரம் ஒவ்வொரு வருடமும் முதலலில் இருந்து தொடங்குவதுபோல் தொடங்கவேண்டிய நிலை பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

பலர் வீடுகளை இழந்து, வீட்டிலுள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்று பரிதாப நிலைக்கு செல்கின்றனர். இதற்கு ஒரு முடிவு இல்லாமல் இருக்கிறது.

இதுபோன்ற அசம்பாவிதங்களில் இருந்து மக்களின் உயிரிழப்புகளை தவிர்க்க, ஜப்பான் அரசு பேரிடர் நிவாரண பணியாளர்கள், இயந்திரங்கள் என பலவற்றை தயார் நிலையிலேயே வைத்துள்ளது.

மேலும் படிக்க | EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை

இருப்பினும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க இதுவரை எந்த ஒரு உருப்படியான கண்டுப்பிடிப்பும் கண்டறியப்படாமல் இருந்தது.  

இந்நிலையில் தற்போது வீட்டு வசதி நிறுவனமான "இச்சிஜோ கோமுடென்" (Ichijo Komuten) நிறுவனம்  வெள்ளம் வந்தால் மிதக்கும் வீடு ஒன்றை கண்டுப்பிடித்துள்ளது.

அது என்னவென்றால் குழு தோண்டி அஸ்திவாரம் போடாமல், வீடுகளின் அடிப்புறம் அமைக்கப்பட்ட வீடாகும். ஆனால், வீட்டின் அடிப்புறத்தையும் நிலத்தையும் இணைக்க கடினமான கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கேபிள்கள் 15 அடி வரை நீளம் உள்ளன. அதாவது வெள்ளம் வரும் நிலையில் நிலத்திலிருந்து தண்ணீரில் 5 அடி வரை மேல் எழுந்து வீட்டை அடித்துச்செல்ல விடாமல் மிதந்தவாறு தாக்குப்பிடிக்கும் தன்மையுள்ளது இந்த கேபிள்கள்.

 

மேலும் கதவுகள் தண்ணீர் புகாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வீட்டின் உள்ளே நுழையாமல், வீடு கப்பல் போல் வெள்ள நீரில் மிதக்குமாம். நங்கூரம் போன்று கேபிள்கள் செயல்படுவதால் வீடு அடித்துச்செல்லப்படாமல் அங்கேயே இருக்குமாம்.

வெள்ள நீர் வடியத்தொடங்கியதும் தண்ணீருடனே சேர்ந்து வீடும் கீழிறங்கிவிடுமாம். இது வெறும் யோசனை மட்டுமல்ல, உண்மையில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. அதன் செயல்முறை வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாக அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | விளாடிமிர் புடின் பெண்ணாக இருந்திருந்தால் போரிட்டிருக்க மாட்டார்: பிரிட்டன் PM போரிஸ் ஜான்சன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News