நிர்வாண திருவிழா... 1,250 ஆண்டுகள் பாரம்பரியம்... முதல்முறையாக பெண்கள் பங்கேற்பு - முழு விவரம்

Japan Nude Festival: ஜப்பான் நாட்டில் 1,250 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெறும் நிர்வாண திருவிழாவில் முதல்முறையாக பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 25, 2024, 07:17 PM IST
  • நிர்வாண திருவிழா வாழ்வில் மகிழ்ச்சி வேண்டி நடைபெறுகிறது.
  • இதில் தீய சக்திகளை துரத்த ஆடவர் சண்டையிடுவார்கள்.
  • நிறைய பெண்கள் குழுக்களாக இந்தாண்டு பங்கேற்றனர்.
நிர்வாண திருவிழா... 1,250 ஆண்டுகள் பாரம்பரியம்... முதல்முறையாக பெண்கள் பங்கேற்பு - முழு விவரம் title=

Japan Nude Festival: ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் அங்கு நிலவும் தட்பவெப்ப சூழலுக்கும், கிடைக்கும் வளங்களுக்கும் ஏற்ப பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவை மாறுபடும். இந்தியா என்ற ஒற்றை குடையின்கீழ் அழைக்கப்பட்டாலும், ஜம்மு காஷ்மீர் தொட்டு கிழக்கில் மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கில் குஜராத், மகாராஷ்டிரா தெற்கில் தமிழ்நாடு, கேரளா என ஒவ்வொரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான வேறுப்பாடுகளை நாம் பார்க்க முடியும். 

அதேபோல், அங்கு வெவ்வேறு பண்பாடு மற்றும் கலாச்சார நிகழ்வுகளையும் நம்மால் பார்க்க முடியும். பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்வுகளில் இருந்து கலானிய ஆதிக்கம், மேற்கத்திய தாக்கம், அரசியல் கருத்துருவாக்கம் ஆகியவை சார்ந்தும் பண்பாடு, கலாச்சார நிகழ்வுகள் மாறுபடும் எனலாம். 

மரபு மாற்றத்திற்கு உட்பட்டது...

சில கலாச்சாரங்கள் சிலருக்கு வினோதமாக தெரியலாம், ஆனால் அதை பின்பற்றுபவர்களுக்கு அடிப்படையில் ஏதேனும் ஆழ்ந்த நம்பிக்கையும், பிடிப்பும் நிச்சயம் இருக்கும். எனவே, ஒவ்வொரு கலாச்சாரத்தை வைத்து மற்ற கலாச்சாரங்களை அளவிட கூடாது என கூறப்படுவதுண்டு. மேலும், கால மாற்றத்திற்கு ஏற்ப பண்பாடும், கலாச்சாரமும் மாறுப்படும். இதற்கு தமிழ்நாட்டின் பண்பாட்டு, கலாச்சாரங்களை ஆழமாக ஆய்வு செய்த தொ.பரமசிவனின் கூற்றை உதாரணமாக சொல்லலாம். "மரபு என்பதே மாற்றத்திற்கு உட்பட்டு என்பதுதான்".

மேலும் படிக்க |  இனி கஞ்சா வளர்ப்பதற்கும், வைத்திருப்பதற்கும் அனுமதி... இந்த நாட்டில் - காரணம் என்ன?

அந்த வகையில், ஆசிய நாடுகளில் மிகுந்த செல்வச் சழிப்பான நாடான ஜப்பானில் 1,250 ஆண்டுகள் பாரம்பரிய நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது. அதில் தற்போது அதாவது 1,250 ஆண்டுகளுக்கு பின் பெரியளவில் மாற்றம் நிகழ்ந்திருந்திருக்கிறது. தொ.பரமசிவனின் அந்த கூற்று மெய்யாகியிருக்கிறது. ஆம், மத்திய ஜப்பானில் வருடாவருடம் நடைபெறும் ஆண்களின் 'நிர்வாண திருவிழா' குறித்து பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதில் தற்போது முதன்முதலாக பெண்களும் பங்கேற்றிருப்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. 

நிர்வாண திருவிழாவில் உடை...

இந்த சடங்கில் பெண்களின் 7 குழுக்கள் பங்கேற்றிருக்கின்றன. அதாவது, இந்த திருவிழாவே தீய சக்திகலை ஒழித்து, வாழ்வில் மகிழ்ச்சியை பெறவே இந்த சடங்கு நடைபெற்று வருகிறது. ஆனால், இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விஷயம் என்னவென்றால், பெயரில் இருப்பது போல், இந்நிகழ்வில் யாரும் நிர்வாணமாக பங்கேற்க மாட்டார்கள். 

கடந்த வியாழக்கிழமை (பிப். 22) நடைபெற்ற இந்த திருவிழாவில் பெண்கள் இடுப்பளவிற்கு வரும் பர்பிள் நிறத்திலான Happi Coats மற்றும் வெள்ளை ஷார்ட்ஸையும் அணிந்து இந்நிகழ்வில் பங்கேற்றனர். சுமோ வீரர்கள் அணியும் ஆடையுடன்தான் எப்போதும் ஆண்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். 

முக்கிய நிகழ்வில் பங்கேற்கவில்லை...

திருவிழா நடைபெறும் அந்த கடவுளின் சன்னதியில் மத போதகர் ஒருவர் கூறுகையில், இந்த திருவிழாவில் பெண்களுக்கு தடை என எப்போதுமே கூறியதில்லை. முன்னர், சில பெண்கள் தனித்தனியாக இங்கு வந்திருக்கின்றனர். இருப்பினும், கடந்தாண்டு பெண்கள் அமைப்பினர் சில இதுகுறித்து விசாரிக்கையில், தாராளமாக வரலாம் என்று கூறியிருந்தேன். முக்கியமாக இது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் கொண்டாட்ட திருவிழா. மகளிரின் வருகையால் நிச்சயம் கடவுளும் மகிழ்ச்சியடைந்திருப்பார்" என தெரிவித்தார். 

இருப்பினும், இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கூறப்படும், ஆண்கள் கும்பலாக ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு தீய சக்தியை விரட்டும் அந்த நிகழ்வில் மகளிர் பங்கேற்கவில்லை. பெண்களின் உடலை கவனத்தில் கொண்டு அவர்களை அந்த நிகழ்வுக்கு மட்டும் அனுமதிப்பது கடினமான ஒன்றாகும் என்றார். 

மேலும் படிக்க | Russia Ukraine war: 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3ம் ஆண்டாக தொடரும் ரஷ்யா உக்ரைன் போர்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News