தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! இளைஞர்கள் கோடீஸ்வரராகலாம்..!

Tamil Nadu Government | தமிழ்நாடு அரசு இளைஞர்கள் தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் கெமிக்கல் மற்றும் யூடியூப் பயிற்சிகள் வழங்க உள்ளது. இதில் கலந்து கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 1, 2025, 09:28 AM IST
  • தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி
  • தொழில்முனைவோர் பயிற்சி அறிவிப்பு
  • இளைஞர்கள் கோடீஸ்வரராகலாம்
தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! இளைஞர்கள் கோடீஸ்வரராகலாம்..! title=

Tamil Nadu Government News | தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 08.01.2025 முதல் 10.01.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பிளாக் ஃபீனைல் கட்டிங் ஆயில், கிரீஸ், தொழில்துறை சோப்பு எண்ணெய், பைப் கிளீனிங் பவுடர், வாட்டர் டேங்க் கிளீனிங் லிக்விட், டிஷ்வாஷ் சோப், டிடர்ஜென்ட் சோப், டெட்டால், எஸ்எஸ் மெட்டல் கிளீனிங் லிக்விட், கார் பாலிஷ் மற்றும் இண்டஸ்ட்ரியல் ஃப்ளோர் க்லீனிங். ஃப்ளோர் கிளீனர், டிஷ்வாஷ் திரவம், சோப்பு திரவம், ஃபேப்ரிக் சாஃப்ட்னர் & கண்டிஷனர், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை. 

மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகையில் உயர்வு? பட்ஜெட்டில் வரவிருக்கும் மாஸான அறிவிப்பு?

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600
032. கைபேசி எண்கள் - 8666102600 / 7010143022. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

யூடியூப் பயிற்சி

இதேபோல் தமிழ்நாடு அரசு இன்னொரு பயிற்சியையும் வழங்க உள்ளது. அதன்படி, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "யூடிபூர் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சி வரும் 00.01.2025 முதல் 11.01.2025 வரை நடக்க உள்ளது. இந்த மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. சொந்தமாக YouTube சேனவை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்வைடு ஷோ உருவாக்கம். சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வகையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது. பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு: ஆண்லைன் மார்க்கெட்டிங் - டொமைன் பெயரி & ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் உள்ளிட்டவை கற்றுக் கொடுக்கப்படும்.

மேலும் படிக்க | பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு: 1000 ரூபாய் ரொக்கம்... விரைவில் வருகிறது நல்ல செய்தி!

ஆர்வமுள்ளவர்கள் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்ட குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.edtn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Training Venue:
District Programme Manager
District Industrial Centre Conference Hall,
Villupuram District : 90801 30299
Entrepreneurship Development and Innovation 9080609808, | Insstute Guindy, Chennai - 600 0332. - 9841693060

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News