Budget 2025: புதிய வரி முறை, ஜிஎஸ்டி, விவசாயம், எம்எஸ்எம்இ... அனைத்திலும் குட் நியூஸ் காத்திருக்கு!!

Union Budget 2025: ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் பட்ஜெட் குறித்த பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் வரி விலக்கு பற்றிய எதிர்பார்ப்பே வழகம் போல அதிகமாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 1, 2025, 05:19 PM IST
  • ஜிஎஸ்டி விதிகளை எளிமையாக்க வலியுறுத்தல்.
  • வேளாண்மைத் துறையில் புதிய கடன் திட்டங்கள்.
  • புதிய வரி முறையின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க நடவடிக்கை.
Budget 2025: புதிய வரி முறை, ஜிஎஸ்டி, விவசாயம், எம்எஸ்எம்இ... அனைத்திலும் குட் நியூஸ் காத்திருக்கு!! title=

Union Budget 2025: இன்னும் 1 மாத காலத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். நிதி அமைச்சக அதிகாரிகள் பட்ஜெட் தாக்கலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல துறைகளை சார்ந்த பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 

Budget 2025 Expectations: பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் பட்ஜெட் குறித்த பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றில் வரி விலக்கு பற்றிய எதிர்பார்ப்பே வழகம் போல அதிகமாக உள்ளது. இந்த முறை வருமான வரியில் மத்திய அரசு நிவாரணம் அளிக்க உள்ளதாக வரித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வருமான வரி விதிப்பில் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க, பிப்ரவரி 1, 2025 அன்று அரசாங்கம் பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். 

New Tax Regime: புதிய வரி முறையின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க நடவடிக்கை

கடந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிய வரி முறையின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில் பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2025 யூனியன் பட்ஜெட்டிலும் புதிய வரிமுறையை பிரபலமாக்கி, அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்க அரசாங்கம் சில பெரிய அறிவிப்புகளை வெளியிடும் என நம்படுகின்றது.

நுகர்வு அதிகரிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

- டிசம்பர் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில், நுகர்வு அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தனர். 
- நுகர்வு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்க வருவாயில் சில இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர்.
- எனினும், நீண்ட கால பலன்களை பெற, தேவையை அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் கருதுகிறார்கள். 
- இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, நிதிப் பற்றாக்குறையை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 
- இந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கான 4.9 சதவீதத்தை தாண்ட வாய்ப்பில்லை என்பது டிசம்பர் 31ஆம் தேதி பெறப்பட்ட நிதிப்பற்றாக்குறை தரவுகளின் மூலம் தெளிவாகியுள்ளது.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் பரிசு: இன்று முதல் புதிய ஓய்வூதிய முறை.... அனைத்து வங்கிகளிலும் ஓய்வூதியம் பெறலாம்

GST: ஜிஎஸ்டி விதிகளை எளிமையாக்க வலியுறுத்தல்

ஜிஎஸ்டி விதிகளை அரசாங்கம் எளிமைப்படுத்த வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். இது இணக்கத்தின் சுமையை குறைக்கும். இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முன்னுரிமையில் இருக்கக்கூடும். 2025 மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி விதிகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அவர் அறிவிக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. 

MSME, Agriculture: புதிய கடன் திட்டங்கள்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் வேளாண்மைத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஏற்கனவே அதிகம் விவாதித்து வருகிறது. இரு துறைகளுக்கும் புதிய கடன் திட்டங்கள் தொடங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

FM Nirmala Sitharaman: தொழில்துறை பிரதிநிதிகள் அறிவுறுத்தல் 

சில துறைகளில் விதிகளை எளிமையாக்குமாறு தொழில்துறை பிரதிநிதிகள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அந்தத் துறைகளில் அன்னிய முதலீடும் அதிகரிக்கும். குறிப்பாக பசுமை எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் துறைகளை மேம்படுத்துவதற்காக பட்ஜெட்டில் ஒரு பெரிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இத்துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. 

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சியை 7-8 சதவீதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றால் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். ஜிடிபி வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம், 2047 -க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் அரசின் கனவை நிச்சயம் நிறைவேற்ற முடியும்.

மேலும் படிக்க | இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: ஓய்வூதியம், எல்பிஜி சிலிண்டர் முதல் UPI வரை... நோட் பண்ணுங்க மக்களே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News