Kisan Loan | விவசாயிகள் பிணையில்லாமல் பெறும் கடன் வரம்பு இப்போது 2 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு
Kisan Loan Good News | விவசாயிகளுக்கு பிணை இல்லாமல் வழங்கும் கடன் தொகையை 2 லட்சம் ரூபாயாக அதிகரித்து குட் நியூஸ் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. அதனை பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய விவசாயிகளுக்கு குட் நியூஸ் என்னவென்றால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விவசாயிகளுக்கு பிணையில்லாமல் கடன் வரம்பை சமீபத்தில் அதிகரித்தது. இது ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இப்போது ரூ. 2 லட்சம் வரையிலான கிசான் கிரெடிட் கார்டு கடன் வரம்பு நிபந்தனையின்றி மற்றும் எந்தவிதமான டெபாசிட்டும் செலுத்தாமல் பெற முடியும்.
எனவே, அடமான கடன் பெறுவதில் அடிக்கடி சிக்கல்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இது ஒரு சூப்பர் குட் நியூஸ் என்றே சொல்லலாம். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு விவசாய வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஒரு முக்கிய படியாகும். கடன் வரம்பை அதிகரிப்பது மற்றும் பிணை வரம்பு நீக்குவதன் மூலம், விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் முதலீடு செய்வது அதிகரிக்கும்.
மத்திய அரசு வழங்கும் கிசான் கடன் மூலம் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உபகரணங்களை வாங்குதல், கால்நடைகள் மற்றும் பிற விவசாய நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளலாம்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆதரவு பெருமளவு தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. வங்கிகள், தனியார் கடன் வங்கிகள் மற்றும் நிறுவனங்களால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. அவர்கள் கடன் கொடுத்து வசூலிப்பதில் முறைகேடுகள் மற்றும் முறையற்ற அணுகுமுறை கையாள்வது விவசாயிகளின் தற்கொலைக்கு வித்திடுகிறது.
இதனால் விவசாயிகளுக்கான கிசான் கடன் வரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. ஆர்பிஐ எடுத்திருக்கும் இந்த முக்கிய நடவடிக்கை மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை எந்தவித வட்டியும் இல்லாமல், அழுத்தமும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும்.
கடன் வரம்பு அதிகரித்திருபதால் விவசாயிகள் தங்களின் விவசாயத்தை அதிகரிக்க முடியும். உற்பத்தி கொள்முதல் என எல்லாவற்றுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், விவசாய கூலிகளுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த கடனை பெற முதலில் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டும். அதற்கு விவசாயி விண்ணப்பிக்க வேண்டும். கிசான் கிரெடிட் கார்டுக்கு (KCC) விண்ணப்பிப்பது ஒப்பீட்டளவில் எளிதாகிவிட்டது. நீங்கள் விரும்பும் வங்கி அல்லது அரசாங்க போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து நேரடியாக கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பிக்கும்போது உங்கள் தனிப்பட்ட விவரங்கள், நில உரிமை விவரங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்ற அடிப்படை விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும். அதன்பிறகு உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும். அதில் உங்கள் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் கிசான் கிரெடிட் கார்டு கிடைக்கும்.