டைட்டானிக் கப்பலுக்கு சுற்றுலா சென்ற பயணிகளை 2 நாட்களாக காணவில்லை! ஆட்லண்டிக் கடலின் மர்மம்

Missing Titanic Submarine:  டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற பயணிகள் காணமல் போன விவகாரத்தில், 70 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 20, 2023, 01:54 PM IST
  • டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற பயணிகளை இரண்டு நாட்களாக காணவில்லை
  • நீர்மூழ்கிக் கப்பலும் காணமல் போனது
  • 5 பயணிகள் பயணித்த கப்பலில் 70 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது
டைட்டானிக் கப்பலுக்கு சுற்றுலா சென்ற பயணிகளை 2 நாட்களாக காணவில்லை! ஆட்லண்டிக் கடலின் மர்மம் title=

புதுடெல்லி: டைட்டானிக் கப்பலை பார்க்க ஐந்து பேருடன் சென்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் ஜூன் 18 அன்று காணாமல் போனதாக அமெரிக்க கடலோர காவல்படையின் உயர் அதிகாரி கூறியதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலில் 70 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே எஞ்சியிருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காணமல் போன சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை தேவும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திங்களன்று ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் ஏடிஎம் ஜான் மௌகர், "இந்த கட்டத்தில் 70 முதல் முழு 96 மணிநேரம் வரை பயணிகள் பாதுகாப்பாக இருக்கலாம் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்" என்று பிபிசி தெரிவித்துள்ளது.

இரண்டு விமானங்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் சோனார் மிதவைகள் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தேடுதல் நடக்கும் பகுதி வழக்கமான கடல் போக்குவரத்துக்கு மிகவும் தொலைவில் இருப்பதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் சிரமமாகவும், நடவடிக்கைகளை கடினமாகவும் மாற்றியிருக்கிறது.

இருந்தபோதிலும், கப்பலில் உள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டு வர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் ரியர் அட்ம் மௌகர் கூறினார்.

மேலும் படிக்க | குடித்து விட்டு விமானம் ஓட்ட தயாரான விமானி... கைது செய்த போலீஸ்.

காணமல் போன நீர்மூழ்கிக் கப்பல் யாருக்கு சொந்தமானது?
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் OceanGate Expeditions நிறுவனத்திற்குச் சொந்தமானது, இது ஆழ்கடல் ஆய்வுக்காக மனிதர்களைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புகிறது. இந்த நிறுவனம், கடந்த காலங்களில் RMS டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பயணத்திற்கு ஒருவருக்கு $250,000 கட்டணம் என்று நிறுவனத்தின் விளம்பரம் கூறுகிறது.  

இந்த நீர்மூழ்கிக் கப்பல், டிரக் அளவிலானது, ஐந்து பேரை ஏற்றிச் செல்லக்கூடியது. பொதுவாக நான்கு நாட்களுக்கு தேவையான அவசரகால ஆக்சிஜனுடன் டைவ் செய்கிறது. 3,800 மீ ஆழத்தில் உள்ள சிதைவுக்குள் மூழ்குவது உட்பட மொத்தம் எட்டு நாள் பயணத்திட்டம் இது.

அமெரிக்க கடலோர காவல்படையின் கூற்றுப்படி, ஜூன் 18 அன்று நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு, பயணம் தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்குள் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று (2023, ஜூன் 19, திங்கட்கிழமை) செய்திகள் வெளிவந்தன.

நீர்மூழ்கிக் கப்பலுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் பல அரசு நிறுவனங்கள் மற்றும் ஆழ்கடல் நிறுவனங்களிடமிருந்து உதவிகள் கிடைத்துள்ளது.  டைட்டானிக்ஸ் கப்பலின் சிதைவு நியூஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜான்ஸுக்கு தெற்கே 700 கிமீ தொலைவில் உள்ளது, இருப்பினும் மீட்பு பணி, மாசசூசெட்ஸின் பாஸ்டனில் இருந்து இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க | கடும் கோடையில் வற்றும் நதி! ஐரோப்பிய பொருளாதாரத்தையே பாதிக்கும் ரைன் ஆற்றின் நீர்மட்டம்

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்களில் 58 வயதான பிரிட்டிஷ் கோடீஸ்வர தொழிலதிபரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங்கும் ஒருவர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வார இறுதியில் சமூக ஊடகங்களில் தனது பயணம் தொடர்பாக பதிவிட்ட  ஹமிஷ் ஹார்டிங், டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை நேரடியாக பார்க்கும் பயணம் தொடர்பாக"இறுதியாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் இந்த ஆண்டு, நியூஃபவுண்ட்லேண்டில், 40 ஆண்டுகளில் மிகவும் மோசமான குளிர்காலம் நிலவுகிறது" என்றும் அவர் பதிவிட்டிருந்தார், மேலும், "வானிலை சீராக இருப்பதால்,  நாங்கள் நாளை (ஜூன் 18) டைவ் செய்ய முயற்சிக்கப் போகிறோம்" என்று ஹமிஷ் ஹார்டிங் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

2023 இல் டைட்டானிக் கப்பலுக்கு ஆள் அனுப்பப்பட்ட முதல் மற்றும் ஒரே நீர்மூழ்கி கப்பல், இதுவாகத் தான் இருக்கும். இந்த வருடத்தில் எஞ்சியுள்ள நாட்களில் வேறு ஏதாவது பயணக்குழு அங்கே போனாலும் போகலாம். 

மேலும் படிக்க | ஜெனின் நகரில் தீவிரமாகும் மோதல்! இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 4 பாலஸ்தீனியர்கள் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News